விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நான்றிலஏழ்*  மண்ணும் தானத்தவே,*  பின்னும் 
    நான்றில ஏழ்*  மலை தானத்தவே,*  பின்னும்
    நான்றில ஏழ்*  கடல் தானத்தவே,*  அப்பன் 
    ஊன்றி இடந்து*  எயிற்றில் கொண்ட நாளே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை
நான்றில - நழுவாதவையாய்
தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;
பின்னும் - மேலும்
ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்)
நான்றில - சலியாதவையாகி

விளக்க உரை

மஹாவராஹ மூர்த்தியாகி நிலத்தை யிடந்தெடுத்த வரலாற்றை யநுஸந்திக்கிறாரிப்பாட்டில். ரஸாதலத்தில் கிடந்த பூமியை என்னப்பன் திருவெயிற்றாலே இடந்தெடுத்தருளின போது ஸப்தத்வீபங்களும் ஸப்தகுல பர்வதங்களும் ஸப்த ஸாகரங்களும் தம்தம் ஸ்தானங்களிலே நிச்சலமாயிருக்கும்படி யெடுத்தருளினான், இதென்ன ஆச்சரியம்! என்கிறார். ஒரு வ்யாபாரத்தாலே செய்த தாயிராமல் ஸ்வஸங்கல்பத்தாலே ஆச்சரியமாகச் செய்த வித்தனையென்று ஈடுபடுகிறபடி. இங்கே ஈட்டு -ஸீக்தி காண்மின்;- “இவன் பெரிய வானைத்தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும் முன்பு போலே ஒரு குறையற உண்டாருடுப்பாராய்ச் செல்லுகிபடி. ஆதாரமானவன்கூட நிற்கையாலே இவற்றுக்கு ஒரு குறைவாராதே.” முன் ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷ்னென்னுமசுரனைத் திருமால் மஹாவராஹமாகத்திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின் என்பது வராஹாவதார வரலாறு. அந்தக் கோலாஹலத்தில், ஸப்த த்வீபரூமான பூமிபேதங்களும் குலாசலங்களும் ஏழ்கடல்களும் ஒரு மாறுபாட்டையாதே நிச்சலமாகி ஸ்வஸ்வ ஸ்தானங்களிலே யிருந்தன வென்பது இங்கு ஆச்சரியம்.

English Translation

The seven plains stood firmly in place, the seven mountains stood firmly in place, the seven oceans stood firmly in place, when my Father lifted the Earth with his tusk teeth!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்