விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆறு மலைக்கு*  எதிர்ந்துஓடும் ஒலி,*  அரவு 
    ஊறு சுலாய்*  மலை தேய்க்கும் ஒலி,*  கடல்
    மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,*  அப்பன் 
    சாறுபட*  அமுதம்கொண்ட நான்றே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி - தங்கள் பிறப்பிடமான மலைகளையே நோக்கித் திரும்பியோடுகிறஓலியும்.
அரவு ஊறு சுலாய் - வாஸீகியென்கிற பாம்பினுடம்பைச் சுற்றி
மலை தேய்க்கும் ஓலி - மந்தர மலையிலே தேய்க்கிற (ஓலியும்
கடல் மாறு சுழன்று - கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று
அழைக்கின்ற ஒலி - கோஷிக்கிற கோஷமும் உண்டாயின.

விளக்க உரை

கடல் கடைந்தபடியை யநுஸந்தித்து ஈடுபடுகிறார். துர்வாஸமுனிவனுடைய சாபத்தினால் தேவர்களினுடைய செல்வம் யாவும் ஒழிய, அசுரர் வந்து பொருது அமரரை வெல்ல, பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தமலையை மத்தாக நாட்டி வாசுகி யென்னும் மகாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடைந்ததாகப் புராண வரலாறு அறிக. மஹாநதிக ளெல்லாம் மலைகளின்று பெருகிக் கடலிலே வந்து சேருமே; அப்படி சேருவதற்காக ஆறுகள் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனவாம். கடைகிற போது மலைகளிற் காட்டில் கடல் உயருகையாலே ஆறுகள் எதிர்வெள்ளங் கோத்து மலைகளையே நோக்கியே திரும்பியோடுகிற வோசை விலக்ஷ்ணமாயிருந்ததென்று முதலடியாற் சொல்லுகிறது. இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி;-‘கடலிலே மந்தரத்தை நட்டவாறே கடல் கொந்தளித்து ஸஹயம் போய்த்தாழ்ந்து கொடுத்தது; நீரோனது தாழ்ந்த விடத்தே ஒடக்கடவதிறே. ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டோடுகிற போதை த்வநியாயனது இவர்க்குச் செவிப்படுகிறபடி. இவர்க்குக் காலத்ரயத்திலுமுள்ள தெல்லாம் தெரியும்படியிறே அவன் வெளிச்சிறப்பித்தது.”

English Translation

What sounds arose when my Father churned for ambrosia! The rivers lashed water backwards over mountains, the ocean swirled in waves back and forth, as a snake-wrapped-mountain grated the Earth!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்