விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்*  நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,* 
    சிகர மணிநெடு மாடம் நீடு*  தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*
    மகர நெடுங்குழைக் காதன் மாயன்*  நூற்றுவரை அன்று மங்க நூற்ற,* 
    நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்*  என்  நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயன் - ஆச்சர்யகுண சேஷ்டி தங்களையுடையனாய்
அன்று - பாரதயுத்தம் நடந்தவக் காலத்தில்
நூற்றுவரை - துரியோதநன் முதலிய நூறுபோர்களை
மங்க நூற்ற - தொலையும்படி ஸங்கல் தவனும்
நிகர் இல் முகில் வண்ணன் - ஒப்பற்ற காளமேக வண்ணனும்

விளக்க உரை

சென்று சேர்வேன், சென்று சேர்வேனென்று பலகாலுஞ் சொன்ன பராங்குச நாயகியை நோக்கி ‘அம்மா! நீயே சென்று சேர்ந்தாயாகில் ஊரும் நாடும் மற்றுமெல்லாரும் உன்னைப் பழி சொல்லாரோ’ என்று தோழிமார் சொல்ல, ‘அப்படி பழி சொல்லுவாரையன்றோ நான் தேடுகிறது’ என்று இவள் சொல்ல ‘பழி சொன்னால் உனக்கு லஜ்ஜையாகாதோ?” என்று பின்னையும் தோழிமார் கேட்க, அவனுடைய அழகினாலும் ஆச்சர்ய திவ்ய சேஷ்டிதங்களாலும் என்னுடைய நெஞ்சும் லஜ்ஜையும் அவஹரிக்கப்பட்டு எத்தனையோ காலமாயிற்யே!, ஆதலால் இனித் தென்திருப்பேரையிலே நானே போகத் தடையென்? என்கிறாள். நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்-என்பதற்கு நகரம் முதலான விடங்களிலே சென்று எம்பெருமானைத் தேடுவேன் என்று பொருள்படவுங்ட கூடும்; அதுவன்று பொருள். “படை வீட்டிலும் நாட்டிலும் பத்தநாதிகளிலும் பழி சொல்லுவாரைத் தேடுவேன்” என்பது பூருவர்களின் வியாக்கியானம். எம்பெருமானை நான் தேடுகிறேனல்லேன், பழி சொல்லுவாரையே தேடுகிறேனென்கிறாள். அதாவதென்னென்னில்; பழி சொல்லுகிறவர்கள் அவனையும் இவளையும் சேர்த்தன்றோ பழி சொல்லுவது; அதுதானே இவளுக்கும் பரமபோக்யமென்று காட்டினபடி. அவனோடு எனக்குச் சேர்த்தியில்லையேயாகிலும் பழிசொல்லுவாருடைய கருத்தாலேயாகிலும் சேர்த்தி நேர்கின்றதே, அதுவேயெனக்கு உவப்பு என்கிறாள் போலும் பழிக்கு அஞ்சவேண்டியிருக்க, பழி சொல்லுவாரைத் தேடுகிறேனென்கிறவிது ஸ்த்ரீத்வ லகூணத்திற்குப் பொருந்துமோ வென்ன, நாணெனக்கில்லை யென்கிறாள். அப்படியா? இந்தநிலைமை எப்போது முதற்கொண்டு? என்றார்கள்; அதற்கு விடையளிக்கிறாள் மேல் மூன்றடிகளால். மகர நெடுங்குழைக் காத னென்று இத்தலத்தெம்பெருமான் திருநாமம். மகராயத கர்ணபாச: என்று வடமொழி வழக்கு இங்கே ஒரு சிறிய ஆராய்ச்சி; மகரநெடுங்குழைக்காதன் என்று ஆழ்வாரருளிச் செய்ததனால் அத்திருநாமம் வழங்கலாயிற்றா? அல்லது, ஏற்கனவே வழக்கத்திலிருந்த திருநாமத்தை ஆழ்வார் எடுத்துரைத்தாரா? என்று சிலர் கேட்பதுண்டு. இரண்டுபடியும் ஸம்பாவிதமேயென்பர்; பெரியயேரர். இந்த விசாரம் இத்தலத்தெம்பெருமான் திறத்தில் மாத்திரம் செய்வதென்று. மற்றும் :பலதலத் தெம்பெருமான்களின் திருநாமங்களும் அருளிச் செயலிலுள்ளபடியே வழங்கி வருகின்றன எம்பெருமான் திருநாமங்கள் மாத்திரமன்று; திருமோகூரில் தடாகத்தைத் தாளதாமரையென்றும், வானமாமலையில் தடாகத்தைச் சேற்றுத் தாமரையென்றும், அவ்விடத்துச் சோலையொன்றைப் தேனமாம்பொழி லென்றும், திருக்குடத்தையில் புஷ்கரிணியைப் பொற்றாமரை யென்றும், திருக்குறுங்குடியில் புஷ்கரிணியைக் கரண்டமாடு பொய்கை யென்றும் இங்ஙனேயுள்ள பல வழக்குகளிலும் இந்த ஆராய்ச்சி ஒக்கும். ஆழ்வார் திருவாக்குக்களை மூலமாகக் கொண்டே இவ்வழக்குகள் தோன்றின வென்னலாம். “நூற்றுவரையன்று மங்கநூற்ற” என்ற சொற்சேர்த்தியை நோக்கி இங்கு நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர்-“துர்யோதநாதிகளை வெல்ல எண்ணினாற்போலே என்னெஞ்சை அபஹரிக்கைக்கு எத்தனை காலமெண்ணினானே?”

English Translation

O Sakhis! I will search town and country, I have no shame. The Lord inTiruppereyil is surrounded by mountain-like jewel mansions. He is Makara-Nedun-Kulai-Kadan, Lord wearing Makara ear rings. He is the discus Lord who killed the hundred Kauravas; how long ago he stole my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்