விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி*  கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக் 
    கொண்டு,*  அலர் தூற்றிற்றுஅது முதலாக்*  கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*
    மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்*  நீள்விசும்பும் கழியப் பெரிதால்,* 
    தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த*  தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண் திணி ஞாலமும் - மண் செறிந்த பூமியும்
ஏழ் கடலும் - (அதைச் சூழ்ந்த) ஸப்த ஸகாரங்களும்
நீள் விசும்பும் - இதெல்லாவற்றுக்கும் இடங்கொடுக்கும் மஹாவகாசமான ஆகாதமும் ஆகிய இத்தனைக்கும்
கழிய - அவ்வருகுபட்டதாய்
பெரியது ஆல் - பெருந்திராநின்றது;

விளக்க உரை

ஊரார் பழி சொல்வதே பெருவாக எனக்கு வளர்ந்து செல்லுகின்ற காதாலனது ஸகலலோகங்களையும் கபளீகரித்துச் செல்லா நின்றது; ஆனபின்பு அவனிருந்த திருப்பேரையிலே சென்றல்லது நிற்க மாட்டேனென்கிறாள். கண்டதுவே கொண்டு என்பதற்கு ‘அப்பெருமானை நான் கண்ணாலே கண்ட மாத்திரத்தையே கொண்டு’ என்று பொருள் தோன்றக்கூடுமானாலும் அதுவன்று பொருள்; வெளியில் காணும் என் செயல்களையே கொண்டு என்று பொருள். அதாவது என்னெஞ்சினுள்ளே ஓடுகின்ற ஆசைப்பெருக்கை ஒருவனங் காணமுடியாதே; நான் வாயாற் சொல்லுகிற சில வார்த்தைகளையும் தொழுவது அழுவதான் சிவபடிகளையுமன்றோ இவ்வுலகர் காண்பது; என்மேனி மேலிந்திருப்பதையும் இவர்கள் காணக்கூடும். ஆக இவர்கள் காணுமிவ்வளவையே கொண்டு என்றவாறு. இந்த ப்ரத்யக்ஷ் பரிகவித நிமித்தங்களாலே எம்பெருமானுக்கும் எனக்கும் சேர்த்தியுண்டானதாகக் கூறி உலகர் பழிதூற்றுகின்றார்களே, இப்பழி தூற்றதலே வினைநீராக என் காதல் வளரத் தொடங்கிற்று; அங்ஙனம் வளாந்த காதலானது ஞானமும் கடலும் விசும்பும் ஆகிய இவையெல்லாம் ஏகதேசயென்னும்படி வளர்ந்திட்டது; இப்படிப்பட்ட பசியைக் கொண்டு நான எங்ஙனே ஆறியிருக்கும்படி; தென்திருப்பேரையில் சென்று சேர்ந்தே காதல் தீர அநுபவித்துக் களிப்பேனென்றதாயிற்று.

English Translation

O Sakhis! For the very reason that you all gather and join hands with my Lord in heaping blame over me, my love grows. If I were to tell you how, if would exceed the Earth and sky, I must go then to my Lord and join him in Tiruppereyil, lapped by waters

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்