விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை*  செற்றபிரான் வந்து வீற்றிருந்த,* 
    பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி*  பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,* 
    ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,* 
    ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?*  என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர் எயிற்கே - திருப்பெரெயில் தலத்திற்கே
என் நெஞ்சம் - எனது நெஞ்சானது
புக்கு - புகுந்து
நாடி - அவனைத் தேடி
பேர்த்து எங்கும் வரகாண மாட்டேன் - மீண்டு ஒரிடத்திற்கும் வரக்காணேன்:
தோழி –!. - வாராய் தோழியே

விளக்க உரை

நங்காய்! உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம். இராவணனைக் கொன்ற விஜயலக்ஷ்மியோடே தென்திருப்பேரையில் யெழுந்தருளியிருக்கிற இருப்பைக் கண்ட நெஞ்சு இன்னமும் மீண்டு வாராது; எனக்கு இங்கொரு துணையுமில்லை. துணையான எனது நெஞ்சை அழைக்க வல்லாருமில்லை; இங்கு ஆரைக்கொண்டு என்ன புருஷார்த்தம் ஸாதிப்பது? இனி என்னெஞ்சு போய்ச் சேர்ந்த தேசத்திலேயே நானும் போய்ச் சேருவதே தகுதி யென்கிறளாயிற்று. ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின;- “அஹஞ்ச அநுதமிஷயாமி லக்ஷ்மணென்ற கதாம்கதிம் என்ற பெருமாளைச் போல இப்பிராட்டியும் என்னெஞ்சு தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப்பேரையிலே புக்கார்ப்போலே நானும் அங்கே புகுமத்தனை யென்கிறாள்” என்று. இராமபிரான் பதினோராயிரமாண்டு இவ்விபூதியிலே யெழுந்தருளியிருந்து பிறகு நித்யவிபூதியேறச் செல்ல நினைத்து முன்னம் இளையபெருமாளைப் பிரித்து பின்னை தம்பி போனவழியே நானும் போகிறனென்று உடனெழுந்தருளினதாக ஸ்ரீராமாயணத்திலுள்ள கதை இங்கே அநுஸந்தேயம். தென்னியலங்கை செற்றபிரான் வந்து வீற்றிருந்த என்றது-பெருமாள் விரோதி நிரஸநம் பண்ணின விடாய்தீர இங்கேவந்தார்; அவருடைய விடாய்கெட பார்த்தாரம் பரிஷஸ்ஜே என்றாப்போலே அனைத்து உபசாரங்கள் செய்ய என்னெஞ்சு ஏற்கனவே போயிற்றென்படியாம். இரண்டாமடிக்கு நம்பிள்ளையருளிச் செய்யுமது பாரீர்;- மீள வொண்ணாத லங்கையிலே புக்க திருவடியும் மீண்டுவந்தான்; அணித்தான இவ்வூரிலே புக்க நெஞ்சு மீண்டுவரக் காண்கிறிலேன். நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்ல வேண்டாவிறே.” எம்பெருமானுக்குத் தூதுவிட வேண்டியதுபோக, தமது நெஞ்சுக்கே தூது விட வேண்டும்படியான நிலைனையுமுண்டு ஆழ்வார்க்கு; திருவிருத்தில் அன்னஞ் செல்வீரு மென்கிற பாட்டிலே என்னெஞ்சினாரைக் கண்டாலென்னைச் சொல்லி....... இதுவோ தகவென் றிசைமின்களோ என்று நெஞ்சைக் குறித்துத் தூதுவிட்ட படியுமுண்டே; அங்ஙனே இப்போதும் தூதுவிடப்பார்த்து ஆரையினயிங்குடையம் தோழீ இத்யாதி பணித்தபடி. தூது செல்வார் கிடைத்து நெஞ்சு இங்கு மீண்டுவந்தாலும். எப்பெருமானும் இங்கு வந்து சேர்ந்தாலும், இங்கே ஸாதிக்ககூடிய பயன் என்கொல்? நானுண்டாக வேணுமே; இங்கு வெறுத்தரையான்றோ கிடக்கிறது என்கிறாள் ஈற்றடியின் முற்பகுதியினால். ஆகவேநெஞ்சு போனவழியே நானும் போகப் பார்க்கிறேனென்று தலைக்கட்டினாளாயிற்று.

English Translation

Longily, O Sakhis!, my heart enters Tiruppereyil where the Lord resides. He destroyed the walled city of Lanka girdled by the ocean. Alas! I do not see my heart return, now whose company have I? None to call him back either; whose help for doing what, alas! I see only what my heart sees

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்