விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மருதப்பொழில‌ணி*  மாலிருஞ்சோலைமலைதன்னைக்* 
  கருதி உறைகின்ற*  கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை* 
  விரதம்கொண்டேத்தும்*  வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* 
  கருதியுரைப்பவர்*  கண்ணன்கழலிணை காண்பர்களே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மருதம் பொழில் - மருகஞ்சோலைகளை
அணி - அலங்காரமாகவுடைய
மாலிருஞ்சோலைமலைதன்னை - திருமாலிருஞ்சோலை மலையை
கருதி - விரும்பி
உறைகின்ற - (அதில்) எழுந்தருளியிருக்கின்ற

விளக்க உரை

இத்திருமொழிகற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டுகிறார், இப்பாட்டால், மருதப்பொழில்- அர்ஜுகவ்ருக்ஷங்கள். விரதம் கொண்டு- திருப்பல்லாண்டு பாடுகை என்றிறே பெரியாழ்வாருடைய விரதம்

English Translation

These are songs by Srivilliputtur’s Vishnuchitta, who vows worship to the dark ocean-hued lord residing in the midst of forest groves of Malirumsolai hill. Those who love to sing them will see the feet of Krishna

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்