விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முனிந்து சகடம் உதைத்து மாயப்  பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,* 
    கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த*  கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*
    முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!*  முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,* 
    கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே*  காலம் பெறஎன்னைக் காட்டுமினே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முனிந்து சகடம் உடைத்து - கோபத்தினால் சகடா சுரைனை யுதைத் தொழித்தவனும்
மாயம் பேய்முலை உண்டு - வஞ்சகப்போய் வடிவாக வந்து பூதனையின் முலையை யுண்டு அவளை முடித்தவனும்
மருதிடை போய் - இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து செறைவனும்
கனிந்த விளவுக்கு கனறு எறிந்த –  விளங்கனியின் மீது வத்ஸாஸூரனை வீசியெறிந்தவனுமான
கண்ணபிரானுக்கு - கண்ணபிரான் விஷயத்திலே

விளக்க உரை

தென்திருப்பேரெயிலிலே என்னைக் கடுகக்கொண்டுசென்று சேர்ப்பதே தாய்மார்களான் வுங்களுக்கு உற்றது என்கிறாள். எம்பெருமானுடைய சில சேஷ்டிதங்களிலே தான் ஈடுபட்டமையை யுரைக்கின்றாள் முன்னடிகளில். அஸூரனால் ஆவேசிக்கப்பட்ட சகடத்தைத் தாளை நிமிர்த்துச் சாடியதென்ன; நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லவந்த பூதனையை முடித்ததென்ன, இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்துசென்று செய்த சேஷ்டையென்ன, வத்ஸாஸூரனைக்கொண்டு கபித்தாஸூரனை முடித்ததென்ன ஆக இந்த அபதானங்களிலே நெஞ்சைக் செலுத்திப் பெண்மையை யிழந்த நான் உங்கள் முனிவுக்கு இலக்காகிப் பயனென்கொல்? என்கிறாள். எம்பெருமான் அந்த சேஷ்டிதங்களைச் செய்தது தன்னை யீடுபடுத்திக் கொள்வதற்காகவே யென்றிருக்கிறாள். என் பெண்மை தோற்றேன் என்றது-பெண்கள் நிற்வேண்டிய நிலையிலே நிற்கமுடியாத படியாய்விட்டேன் எனறலாறு. நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்னுமிவை நான்கும் பெண்டிர்க்கு உரிய இலக்கணமாதலால் இவை தவிரப் பெற்றே னென்கை. பயிர்ப்பு தவிரப் போகாதாகிலும் மற்ற மூன்றும் தவிர்ந்தமைக்குக் குறையில்லை. அன்னைமீர்காள்! இனி முனிந்து என் செய்தீர்-இனிமேல் என்னை மீட்கலாமென்றோ நீங்கள் நினைக்கின்றது? சகடமுதைத்து முதலான அவனது திவ்ய சேஷ்டிதங்களிலே நான் ஈடுபடுவதற்கு முன்னம் முனிந்தீர்களாகிலும் பயனுண்டாம்; இனி முனிந்து பயனென்? ஆனால் நாங்கள் செய்யவேண்டுவது என்னென்ன; அதற்குச் சொல்லுகிறாள்-முன்னியவன் வந்து வீற்றிருந்த வென்று தொடங்கி. தண்ணீர்க்குச் சொல்லுகிறாள்-முன்னியவன் வந்து வீற்றிருந்த வென்று தொடங்கி. தண்ணீர் பெருகிச்சென்ற பின் அணைகட்டப் பாராதே முந்துற முன்னம் என்னை அத்தலத்திலே கொண்டு சேர்ககப் பாருங்கோ ளென்கிறாள். “அவன் முன்னி வந்து வீற்றிருந்த” என்றும், “என்னைக் முன்னிக் காட்டுமினே” என்றும் அந்வயிக்கலாம். என்னைப் பெறுகைக்கு அவஸரப்ரதீக்ஷ்னாய்க் கொண்டு அவன் முன்னாடி வந்திருக்கு மிடமான’ என்பது முந்தின யோஜநையில் பொருள். நான் முடிவதற்கு முன்னமே என்னைக்கொண்டு சேருங்காளென்பது பிந்தன யோஜனையின் பொருள்.

English Translation

I lost my femininity to my Krishna who smote a devil-cart, drank the ogress breasts, went between dense Marudu trees, and threw a caif against the wood-apple tree, Ladies, come forward, quick! No use blaming me now; show me the way to Tiruppereyil of fruit-laden groves

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்