விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இழந்த எம்மாமைத் திறத்துப் போன*  என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,* 
    உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?*  ஓதக் கடல்ஒலி போல*  எங்கும்
    எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்*  அன்னையர்காள் என்னை என்முனிந்தே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆரை கொண்டு - யாரைத் துணையாகக் கொண்டு
என் உசாகோ - எந்த வார்த்தையைச் சொல்லித்தரிப் பேன்!;
ஓதம் கடல் ஒலி பால - அலைபெறியும் கடலின் ஒலிபோல
எங்கும் எழுந்த -  எல்லாவிடத்திலுங்கிளர்ந்த
நல் வேதத்து ஒலி - ஸாமவேத கோஷமானது
நின்று ஓங்கு - நிரந்தரமாகக் கிளர்ந்து

விளக்க உரை

தனது நெஞ்சு அங்கே போனதற்கு ஒரு காரணஞ் சொல்லுகிறாள் முதலடியில். கொங்கலர் தண்ணந்தழாய் முடியானுக்கு என் நங்கையிழந்தது மாமைநிறமே என்று ஏற்கனவே என் தாய் வருந்திக்கிடந்தா ஒன்றோ. இழந்த அந்த மாமை நிறத்தை நான மீட்டுக் கொணர்கிறேன் காண்மின் என்று சொல்லிப் போன நெஞ்சானது தானும் அங்கே கையொழிந்து நின்றது. எம்பெரமானிடத்திலுள்ளதை நாம கொள்ளை கொள்ளவேணுமேயல்லது நம்மிடத்திலுள்ளதொன்றை அவன் கொள்ளை கொள்ளுகையாவதென்? இதோ நான் போய் அதைக் கவர்ந்து வருகிறேன் காண்மின்’ என்று வீரவாதஞ் செய்துபோன் என்னெஞ்சு என்ன காரணமோ! அங்கே தகர்ப்புண்டது என்கிறாள். நெஞ்சு என்ன வேண்டுமிடத்து நெஞ்சினார் என்று உயர்வாகக் கூறியது பகவத் விஷயத்தில் யீடுபட்ட அதியசத்தைப் பற்ற. அன்னஞ் செல்வீரும்ஞ்ஞ். கண்ணன் வைகுந்தனோடு என்னெஞ்சிரைக் கண்டால் அவரிடை நீரின்னஞ் செல்லீரோ இதுவோ தகவென்றிசைமின்களே என்ற திருவிருத்தப் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது. இழந்த மாமை நிறத்தை மீட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லி நெஞ்சு போயிற்று என்கிறவிதற்கு ஒரு கருத்துச் சொல்லவேணுமே; என் சொல்லலாயும் கவர்ந்தான்காணும் என்பதே இங்குச் கருத்து. உழந்தினியாரைக்கொண்டு என் உசாகோ?-நெஞ்சு நம்மோடே யிருந்தாலன்றோ யாரோடாவது எதையாவது பேசிப் போதுபோக்கலாம். நெஞ்சு பறியுண்டார்க்குக் காலசேஷபம் பண்ண விரகுண்டோ வென்கிறாள். உழந்து என்றது வருந்தியென்றபடி. சிரமப்பட்டாகிலும் எவரோடேயிழந்த பின்பு இனி துக்கப்பட்டு ஆரோடே கூட எத்தைச் சொல்லி நான் காலம் போக்குவதென்கிறாள்;. அசோகவனத்திலே பிராட்டிக்கு த்ரிஜடை ஸரமை என்கிறாலும் சிலர் உசாத்துணையாயினர்; எனக்காவார் இந்நிலத்தில் ஒருத்தருமில்லையே யென்கிறாள். “ஆரைக்கொண்டு என்னுசாகோ” என்றவிடத்து நம்பிள்ளையீடு காண்மின்;- “தேஹாத்மாபிமாநிக ப்ரஹ்மேசாநாதிகளைக் கொண்டு போது போக்கவோ? ஈச்வரோஹ மென்றிருக்கிற ராயிருக்கிற நித்யஸூரிகளைக் கொண்டு போது போக்கவேர் இத்தகையை உரிசூறை கொண்டுபோனவனைக் கொண்டு போதுபோக்கவோ? ஆரைக்கொண்டு எத்தை யுசாவுவது?” தன்னுடைய காலசேஷபமிருக்கும்படியைச் சொல்லுகிறாள் ஒதக்கடலொலி யென்று தொங்கி ஒதங்கிளர்ந்த கடல்போலே யிருந்துள்ள வேதகோஷமானது எங்கும் பரம்பாநின்ற தென்கிருப்பேரெயில் வீற்றிருந்த முழங்குசங்கக் தையனான் எப்பெருமானுடைய ஸ்மித வீஷணுதிகளிலே மீள வொண்ணாதபடி அகப்பட்டேன்; இவை யிருக்கும்படியென்! என்று எப்போதும் நினைந்துருகியிருப்பதே என்னுடைய காலசேஷபம் என்றாருளாயிற்று.

English Translation

O Ladies, why blame me? Lost in the boom of his wonderful conch, I bade my heart, "Go retrieve my lost lustre from the Lord in Tiruppereyil, where he sits amid Vedic chants that rise like ocean eternally". Alas! My heart too remained there; now whose help have I for doing what?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்