விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செங்கனி வாயின் திறத்ததாயும்*  செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,* 
    சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்*  தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*
    திங்களும் நாளும் விழாஅறாத*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் கனி வாயின் திறத்தது ஆயும் - செவ்விய கனி போன்ற திருப்பவளத்திலே அபிநிவேசம் கொண்டதாயும்
செம் சுடர் நீள்முடிவு தாழ்ந்தது ஆயும் - செவ்விய சுடரையுடைய நீண்ட கிரீடத்திலே ஈடுபட்டதாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் - திருவாழி திருச்சங்குளைக் கண்டு உவந்ததாயும்
தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும் - தாமரை போன்ற திருக்கண்களுக்கு அநந்யார் ஹமாகியும்
திங்களும் நாளும் விழா அறாத - மாஸோத்ஸவர்களும நித்யோத்ஸவங்களும் இடையறாத

விளக்க உரை

நங்காய்! இப்படியும் நானமற்றுச் சொல்லுவது தகுதியேவென்று தோழி கேட்க: தோழீ! நான் என்செய்வேன்? எனது நெஞ்சானது தென் திருப்பேரை யெம்பெருமானுடைய திருப்பவளத்தழகிலே போய்ப்படிந்தும் திருவபிஷேகத்தினழலே தாழ்ந்தும், திருவாழி திருச்சங்குகளே யேந்தியிருக்குமழகுகண்டு உகந்தும், மற்றோரழகுக்கு உரித்தரல்லாதபடி தாமரைக்கண்களுக்கு அற்றுத்திலீந்தும் நங்கள் பிரானுக்கு நாணும் நிறைவுமிழந்தது; இனி யெனக்கு நாணும் நிறைவுமுண்டாவதற்கு வழியேது? என்கிறாள் தலைவி. கீழ்பாட்டில் “தோழிமீர்கள் அன்னையர்காள் அயற் சேரியீர்காள்” என்று எல்லாரையும் விளித்துக்கூறியவள இப்பாட்டில் தோழியைமாத்திரம் விளித்துக் கூறுகையாலே. மற்ற பேர்களெல்லாரும் இவளைத் திருத்த நம்மாலாகாதென்று கைவாங்கி அப்பால் போய்விட்டார்களென்பது தெரிகின்றது. தோழி அங்ஙனே போகமாட்டாதவளாகையாலே உடனிருந்து ஹிதஞ் சொல்லவே, அவளுக்கு மறுமாற்ற முரைக்கிறபடி. செங்கனிவாய், திருவடி, சங்கு சக்கரம், திருக்கண் ஆகிற நான்கிலே நெஞ்சு அகப்பட்டமை மன்னடிகளிற் கூறப்படுகிறது. செங்கனிவாய் முதலான நான்கையும் சேரக்சொல்லி இவற்றிலே யென்னெஞ்சு ஈடபட்டது என்னாதே செங்கனிவாயின் திறத்ததாயும் என்று ஒரு வாக்கியமாகவும் இங்ஙனே பல வாக்கியங்களாகச் சொன்னது என்னென்னில்; “தோள் கண்டாள் தோளகண்டார் தொடுகழற்கமல மன்ன தாள்கண்டார் தடக்கை கண்டாருமஃதே” என்றாற்போல ஆழ்வார் தருவுள்ளமானது தனித்தனி வடிவுகொண்டு ஒவ்வொர அவயவந்தன்னிலும் தனித்தனி வடிவுகொண்டு ஒவ்வொரு அவயவந்தன்னிலும் தனித்தனியே சுழியாபரியென்பானொருத்தன் ஒரு ஸூக்ருதமடியாக ஐம்பது வடிவு கொண்டானிறே; அவ்வளவல்லவிறே இவள் கலந்த விஷயம் பண்ண வல்லது. அவன் வ்யக்திதோலும் பரிஸமாப்ய வர்த்திக்கமாபோலேயாயிற்று இதுவும் அவயங்கள் தோறும் தனித்தனி அகப்பட வல்லபடி.” ஸௌபரி விருத்தாந்தம்:-ஸௌபரி என்கிற ஒரு மாமுனிவன் நீர்நிலையிலிருந்து கொண்டு தவம் புரியா நின்றவளவில் அங்கு மீன்களெல்லாம் கூடிக்களித்து விளையாடா நின்றமையைக் கண்ணுற்று ‘நாமும் இப்படி குடும்ப வாழ்க்கையிற் கூடி நின்று சிற்றின்பம் நுகர்ந்து களிக்கவேணும்’ என்று ஆவல் கொண்டு மாந்தாதா என்னும் அரசனுக்குப் பல பெண்கள் இருப்பதாக உணர்ந்து அவனிடம் சென்று தனக்குக் கன்னிகாதானஞ் செய்யுமாறு வேண்ட, அரசன் இவருடைய கிழத்தனத்தையும் குரூபத்தையுங் கண்டு இசையகில்லமால் பெண் கொடுக்க முடியாதென்று நம் வாயாற் சொன்னால் முனிவர் முனித்து சபித்துவிடக்கூடும்; பெண்களிருக்கு மிடத்தற்கு இவரை அனுப்புவோம்; இவரைக் கண்டு பெண்கள் காமுற்றார்களாகில் விவாஹம் செய்து கொள்ளட்டும்; இல்லையாகில் அவர்களே மறுத்துவிடட்டும்; நம்தலையில் பழி வேண்டா’ என்றெண்ணி முனிவரைப் பெண்களிருக்குமிடனுப்ப முனிவர் அங்குச் செல்லுமபோதே தமது தவ வலிமையால் திவ்ய ஸூந்தரமான ரூபத்தை ஏன்றுகொண்டு போய் அவர்கள் முன்னே நின்றவளவில் அங்கிருந்த ஐம்பது பெண்களும் நானே இவரை மணந்துகொள்வேன் நானே இவரை மணந்துகொள்வேன்’ என்று போட்டி போட்டுக்கொண்டு மேல்விழுந்தவாறே. முனிவர் அத்தனை பெண்களையம மணந்துகொள்ள் விரும்பிச் தமது தவவலிமையால் ஐம்பது வடிவமெடுத்து அப்பெண்களநைவரையும் விவாஹம் செய்து கொண்டு மகிழ்ந்திருந்தாரென்று புராணங்களில் இதிஹாஸம். ஆழ்வார் திருவுள்ளம் முதலிலே செங்கனி வாயில் ஈடுபட்டதாம்; ‘நங்காய்! நான் உன்னோடு கூடியிருநதாலென்ன? பிரிந்திருந்தாலென்ன? நான் உன் சரக்கனறோ’ என்று சொல்லத் தொடங்கி தழதழத்து வருகிற திருவாயிலே முந்துற முன்னம் அகப்பட்டதாயி;ற்று. அனந்தரம், பிரிவை ப்ரஸங்கித்துப் பேரநின்ற போது அதிராஜ்ஸூசகமாய் உபயவிபூதிநாத்னென்று தோற்றும்படியிருக்கிற திருவபிஷேகத்தைக்கண்டு தரைப்பட்டதாயிற்று பின்னை இன்னாரென்றறியேன் அன்னேயாழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை யின்னாரென்றாறியேன் என்று மதியமடக்கவரல்ல திருவாழிதிருச்சங்குகளி னழகிலே மூண்;டது. பெருங்கேழ (திருவித்தம்) என்னும்படி தம்மை இவ்வளவும் ஈடுபடுத்திக்கொண்டது திருக்கண்களே யென்றறிந்து அந்தத் தாமரைக்கண்களுக்கு அநந்யார்ஹமாயிற்று. திங்களும் நாளும் விழாவறாத-நித்யோத்ஸவ பகூஷாத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத் ஸரோத்ஸவங்களென்று திவ்யதேசங்களிலே நடைபெறும் உத்ஸங்களுக்கு எல்லையில்லையே; அப்படிப்பட்ட உத்ஸவங்கள் அங்கே குறையற்றுச் செல்லாநிற்க அங்கே வாழ்வதைவிட்டு இங்கே துயரற்றிருக்குமோ என்னெஞ்சு என்கிறாள். “வீற்றிருந்த நாங்கள் பிரானுக்கு” என்கிற சொற்சேர்த்தியழகைத திருவுள்ளம்பற்றி நம்பி;ள்ளை யருளிச்செய்வது பாரீர்;-“இவ்விருப்பு நமக்காக்கொண்டிருக்கிற உபகாரகனுக்கு. இவ்விருப்பு பாபம் பண்ணின ஸம்ஸாரிகளுக்காகவின்றே.’

English Translation

O Friends, my heart has lost its shame and reserve to the Lord who sits in Tiruppereyil, where festivals continue for days and months. How can I forget his fall radiant crown, conch and discus, and the lotus eyes and coral-lips that I have enjoyed so long?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்