விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,* 
    நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்*  என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,* 
    தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்*  தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,* 
    வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்*  செங்கனி வாயின் திறத்ததுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னையர் காள் - தாய்மார்களே!
அயல் சேரியீர் காள் - (செய்தி வினவ வந்த) அக்கம் பக்கத்தவர்களே!
இத்தினி நெஞ்சும நான் காக்க மாட்டேன் - ஸவாந்திரமான இந்த நெஞ்சை நான் அடக்கியாள மாட்டுகின்றிலேன்;
இது என்வசம் அன்று - இந்த நெஞ்சு எனக்கு விதேயமன்று;
இரா பகலும் - இரவும் பகலும்

விளக்க உரை

தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாள் கீழ்ப்பாட்டில் அவ்வளவிலே இத்தலைமகளுக்கு ஹிதஞ் சொல்லுகைக்காகத் தாய்மாரும் தோழிமாரும் அயற் சோரியுள்ளாருமாகத் திரண்டு வந்து சேர்ந்து நிற்க, உங்களுடைய ஹிதவார்த்தைகளைக் கேட்க அவகாசமில்லாதபடி. மகரநெடுங்குழைக்காதன் பக்கலிலே அவகாஹித்த என்னெஞ்சைமீட்கமாட்டுகின்றிலேன் காண்மின் என்கிறாள். நானக்கருங்குழலென்கிற அடைமொழி தோழிமார்களிடத்துப்போல அன்னையர்களிடத்தும் அயற் சேரியங்களிடத்தும் அந்வயிக்கக்கூடவது. நானம்-ஸூகந்த த்ரவ்யங்களாலுண்டான பரிமளம். அது பொருந்திய கருங்குழலையுடையீர்கள்! என் விளித்து அவர்களைப் பழிக்கிறபடியாம். நான் எம்பெருமானைப் பிரிந்து தலை சருகாய் வாடி வருந்திநிற்க. நீங்கள் பூ முடித்து நறுமணங்கமழ வந்து நிற்கின்றீர்களே! இதுவோ தகுதி யென்று பழியிட்டுப் பேசுகிறபடி. இவளோடொத்த இன்பதுன்பங்களையுடையவர்களாயிருக்க ப்ராப்தமாக இவள் வாடிக்கிடக்கிற நிலைமையிலே அவர்கள் பூச்சூடி நறுமணங்கமழவந்து. நிற்பது ஸம்பாவிதமோ வென்று இங்கே ஒரு சங்கை தோன்றக்கூடும். இந்த சங்கையை நம்பிள்ளை தாமே எடுத்துக்கொண்டு இரண்டுபடியாகக் பரிஹார மருளிச் செய்கிறார் காண்மின்;- (ஈட்டு ஸ்ரீஸூக்தி ) “ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ என்று இவளுடைய ஸூகதுக்ங்களே தங்களுக்கும் ஸூகதுக்கமாம் படியிருக்கையிறே தோழிமாராகையாவது; இவள் மயிர்முடி பேணாதே பரிமளம் காணில் முடியும்படியாயிருக்க இவர்கள் குழல் பேணிப் பரிமளங்கொண்டு காரியங் கொள்ளப்போகுமோவென்னில்; கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்க சாத்திக்கழிந்தபடியே ஸர்வ ஸவதானம் பண்ணுவது இவர்களுக்கே; அப்போது அவன் பண்ணின ப்ரஸாதாதிசயத்தாலே அது சருகானாலும் அவர்கள் மாறாதே வைத்துகொண்டிருப்பர்களே, அது இவளுக்கு ஸ்மாரகமாய் நலிகிறடி அன்றிக்கே இவர்கள் தாம் பரிமறங்கொண்டு காரியங் கொள்ளவும் வல்லவர்கள்: அதாவது தாங்கள் தளர்ந்து காட்டில் இவள் மிகவும் தளருமென்று ஒப்பித்துக்கொண்டிருப்பர்கள். தந்தாமுடைய பொறாமையும் பாரார்களாயிற்று இவளை, உஜ்ஜீவிப்பிக்கைக்காகஞ். பெருமாளிலும் க்லேசம் விஞ்சியிருக்கச் செய்தே பெருமாளுடைய ரக்ஷ்ணத்துக்காக இளைய பெருமாள் தம்மைப் பேணிக்கொண்டு தரித்திருந்தாப்போலே.” இத்யாதி. நான் இத்தனி நெஞ்சம் காக்கமாட்டேன்-உங்களுடைய ஹித வசனத்தை நான கேட்கமாட்டேனென்பது இதனாலே காண்மின்; என்சொற் கேளாதே என்னை விட்டசென்று திரிகிற எனது நெஞ்சை நான் மீட்கமுடிந்தாலன்றோ உங்கள் ஹிதவசனங்கேட்கலாவது. ‘உனக்கம் நமக்கும் இனி உறவில்லை’ என்று ஸம்ந்ஙயஸித்து நெஞ்சு போகாநிற்க, என்ன பரிகாரங்கொண்டு நான் உங்கள் ஹிதவசனங் கேட்பது? என்கிறாள். இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்தி; -“ஸம்ஸாரிகள் சப்தாதி விஷயங்களில் நின்றும் மீளமாட்டாதாப்போலேயிறே இவர் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டாதபடி. நெஞ்சம் காக்கமாட்டே னென்று சொல்லிவிடுவது ஒரு வார்த்தையோ? விதேயமான நெஞ்சை வசப்படுத்திக்கொள்ள முயலவேண்டாவோ வென்ன, என் வசமன்ற இது என்கிறாள். நெஞ்சுக்கு நான் வசப்பட்டிருக்க வேண்டியதாயிற்றே யல்லது எனக்;கு நெஞ்சு வசப்பட்டிருப்பதென்பதில்லை யென்றபடி.

English Translation

O Sakhis of fragrant tresses, O Ladies, O People of the neighbourhood! I cannot stop this galloping heart, it is not in my bridle alas! Night and day it runs after the coral-lipped Lord of celestials, Krishna who sits amid honey-dripping groves in Tiruppereyil surrounded by cool fertile fields

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்