விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
    துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*
    முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
    முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மொய் புனல் பொருநல் - உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய
துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன் - துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும்
வண் பொழில் சூழ் வண் குருகூர் - வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான்
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன - மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த
சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் - சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள்

விளக்க உரை

பெரியபெருமாள் திருவடிகளைச் சேர்ந்து ஸர்வப்ரகார ஸம்ச்லேஷமும் பண்ணப் பெறுகையாலே உஜ்ஜீவனம் பெற்றவராய் தாம்ரபர்ணீ தீரவாஸியான ஆழ்வார் முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிரத்துள் இப்பத்தும் வல்லர்வர்கள் திருநாட்டிலே அயர்வறு மமரர்கள் சூழ்ஆனந்தக்கடலிலே ஆழ்ந்திருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துக் தலைக்கட்டிளுராயிற்று. முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிர மென்றவிதனால்-திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாகவே அருளிச்செய்த தென்பது விளங்குமென்பர். ஆனது பற்றியே வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகளாயிரமும் என்று திருவாய்மொழித் தனியன் அவதரித்தபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தியுங் காண்மின்;- “பெரியபெருமாள் திருவடிகளிலே திருவாய்மொழியாயிரமுஞ் சொல்லிற்று. திருமோகூர்க்கு ஈத்தபத்து திருவேங்கடத்துக் கிவைபத்து என்று பிரித்துக் கொடுத்துவித்தனை பெருமாள் திருப்பலகையில் அமுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமாபோலே என்று பிள்ளையருளிச் செய்வர்” முகில்வண்ணவானத்து-முகில்வண்ணனான எம்பெருமானுடைய திருநாட்டிலே யென்று பொருள் கொள்ளலாமாயினும், அங்கிக்கிறனுடைய நிழலீட்டாலே அவன்படியாயிருக்கற வானம் என்று பொருள் கொள்வது சிறக்கும். ஸ்ரீரங்க விமானத்தை அநுபவியாநின்ற பட்டர்:-அபி பணிபதிபாவாத் சுப்ரமந்தச் சயாலோர் மரதகஸூகுமாரை: ரங்கபர்த்துர் மயூகை:, ஸகலஜலதிபாநச்யாம ஜீமூதஜைத்ரம் புலகயதி விமாநம் பாவநம் லோசநே ந: என்றருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கவுரியது. ஆதிசேஷனுடைய அவதாரமான ஸ்ரீரங்கவிமானம் வெண்ணிறத்ததாயினும் உள்ளுக்கிடக்கிற பச்சைமாமரைபோல் மேனியனுடைய திருமேனி நிழலீட்டாலே சாமளமாகவே தமக்கு ஸேவைஸாதிப்பதாக அருளிச்செய்தவாறு.

English Translation

This decad of the thousand songs, by Satakopan of Kurugur, through grace attained at the Lord's feet in groves of Porunal Waters, addresses the good Lord of hue like the raincloud. Those who master it will secure of life of joy, hallowed by good celestials

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்