விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
    கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*
    வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
    அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நான்முகக்கடவுளே என்னும் - தன்னோடொத்த வடிவுடையரான நித்ய ஸூரிகளுக்கு நாதனே! என்கிறாள்;
வண் திருஅரங்கனே என்னும் - ஸ்ரீ ரங்கநாதனே! என்கிறாள்:
அடி அடையாதாள் போல் இவள் - திருவடிகளைக் கிட்டமாட்டாள் போலும் என்னும்படி யிருந்த விவள்
முகில் வண்ணன் அடி - மேகவண்ணனான அவனது திருவடிகளை
அணுகி அடைந்தனள் - கிட்டியடையப்பெற்றாள்.

விளக்க உரை

இவள்-இப்பராங்குச நாயகியானவன், தனக்கொரு முடிவு காண்கிறிலே னென்கிறார். என்று காய் சொல்லுகிறபடி. தனக்கு முடிவாவது – தான் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு முடிவு. நான் ஆத்மாவுள்ளதனையும் இங்ஙனே கஷ்டப்பட வேண்டியதுதானோ? இதற்கொருநாளும் பரிஹாரமில்லையோ லென்கிறாள். தனக்கு முடியும்நாள் இல்லையோ வென்கிறாள் என்றுமாம். (மூவுலகாளிளேயயென்னும்) மூவுலகாளியென்று இங்கு தேவேந்திரனைச் சொன்னபடிவாய், அவனுக்கு அந்தர்யானியானவனே! என்றதாகிறது. (கடிகமழ கொன்றைச் சடையனே!) கொன்றைமாமையை அணியுமவன் பரமசிவன்; அவனுக்கு அந்தர் யாமியானவனே! என்றவாறு. (நான்முகக் கடவுளே!) என்றதும் அப்படியே. (வடிவுடை வானோர் தலைவனே!) எம்பெருமானே இடைவீடின்றி அனுபவிப்பதனாலுண்டான மகிழ்ச்சி வடிவிலே தோன்றும்படியிருக்கிற நித்யஸூரிகளுக்கு நாதனானவனே! என்கிறாள். (வண்திருவரங்கனே! என்னும்) நித்ய ஸூரிகளே அனு வித்திப்போகையன்றிக்கே நித்யஸம்ஸாரிகளும் இழவாமைக்கன்றோ திருவரங்கத்திலே வந்து திருக்கணிவளர்ந்திருளுகிறது; இங்குச் சாய்ந்தருளினதின் பலன் நான் பெற்ற வேண்டாவோ வென்கிறாள். ஈற்றடியின் கருத்து:-“இனிப் பெருமாள் திருவடிகளைச் சேர்ந்து முடியமாட்டாள், போய் முடிந்தாள் என்னும்படி துர்த்தசாபந்நையானனவிவள். இந்த துக்கமெல்லாம் விஸ்ம்ருதமாம்ப தான் ஆசைப்பட்டபடியே பெரிய பெருமான் திருவடிகளையே ஸம்ச்லேக்ஷிக்கப்பெற்றளென்று இவளுடைய திருத்தாயார் ப்ரீதையாகிறாள்” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.

English Translation

She says: "O Lord of the worlds, I know not an end for myself!", "O Matted-hair konrai-Siva!", "O Four-faced Brahma!" "O King of the great celestials!", "O Lord of fragrant Srirangam!" Becoming a refugeless, my daughter has attained the feet of the cloud-hued Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்