விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
    நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*
    அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
    தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீ கொண்ட - மணந்து கொண்ட
ஆய் மகள் - நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்;
தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே - ஸ்ரீ ரங்கநாதனே!
இவள் தனக்கு - இவளுக்கு
முடிவு தெளிகிலேன் - ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன்.

விளக்க உரை

என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்று ஒரு வாக்கியமாகவும் “என்னுடையாவியே யென்னும்” என்று மற்றொரு வாக்கியமாகவும் யோஜிப்பது தவிர, முதலடி முழுவதையும் ஒரே வாக்கியமாக யோஜிப்பதுமுண்டு. இங்கெ ஈட்டில் ஆச்சரியமானதோர் ஐதிஹ்யம் காண்மின்; -“பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்நோ இத்திருவாய்மொழியியலைக் கேட்டருளா நிற்க, இப்பாட்டளவிலே வந்த வாறே என் திருமகள் சேர்மார்பனே யென்னுமென்னுடையாவியே னென்னும் என்று இயலைச் சொத்தருளச் செய்ய, அத்தைக் கேட்டுக் கையையுதறி ‘ஸ்ரீரங்கநாத!’ என்று அணையிலே சாய்ந்தரளினார் பட்டர்” என்று அருளிச் செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியைக் கண்டு இவர்க்கு பகவத்ப்ராப்தி அணித்தாகிறதோ வென்று அஞ்சியிருந்தெனென்று ஜீயரருளிச் செய்வர்.” பட்டர் ஸ்ரீரங்கேச புரோஹிதராகையாலே அடிக்கடி பகவத் ஸன்னிதியிலே உபந்யாஸங்கள் செய்தருள் நேரும். அதற்காக மன்னாடி நஞ்சீயரையழைத்து அருளிச்செயல் பாசுரங்களைச் சொல்லவிட்டுச் செவிக்கினிதாகக் கேட்பது வழக்கம். அமுது செய்து கொண்டே ஒருநாள் கேட்டருளா நின்றாள். அப்போது இயல் ஸேவிக்கின்ற நஞ்சீயர் இப்பாசுரத்தை ஸேவிக்கும் போது “என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்றவிடத்தில் நிறுத்தாமல் ஏக ச்வாஸமாகவே முதவடியை முழுதுஞ்; சொல்லி நிறுத்தினாராம். என்னும் என்பதற்கு ‘என்று சொல்லுகிறாள்’ என்கிற அர்த்தம் தவிர, என்று சொல்லப்படுகிற என்கிற அர்த்தமும் உண்டாதலால் என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுகிற என்னுடைய ஆவியே எனிகிறாள்’ என்று விவக்ஷித்து நஞ்சீயர் நிறுத்தினபடி. பட்டர் அந்த இன் சுவையை யறித்து திருவுள்ளமுமடகுலைப்பட்டா ரென்றதாயிற்று. “இவர்க்கு ப்ராணன் ஒருவாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று திருமகள் சேர்மார்பனாய்க்கொண்டு எனக்கு தாரகனானவனே! என்னும்.” என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுமதான என்னுவியே! என்று பொருள் விவசுமரதமானபடி ஆனதுபற்றியே “இவர்க்கு ப்ராணன் ஒரு வாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று” என்றருளிச் செய்தது. இரண்டாமடியில் வராஹாவதாரத்தை ப்ரஸ்தாவித்தது-நீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறவேணுமானால் அவள் பரிகரமான எங்களை நோக்கியேயாக வேணுங்காண் என்ற கருத்தினாலாம். அன்றியே பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள். மாசுடம்பில் நீர் வாராமானமிலாப்பலறஙாந், தேசுடைய தேவா திருவரங்கச் செல்வனார், பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (நாச்சியார் திருமொழி 11-8) என்று ஆண்டாளருளிச் செய்த கணக்கிலே, பூமிப்பிராட்டிக்கு நீ அருளிச் செய்த திருவாக்கு வெறுமனேயோ? என்று கேட்கிற கருத்தாகவுமாம். மூன்றாமடியில் நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொண்ட வரலாறு அநுஸந் திக்கப்படுகிறது. குமபர்மகளான நப்பின்னையை மணந்து கொள்வதற்காக ஒருவர்க்கு மடங்காத ஏழுரிஷபங்களை; வலியடங்கின வரலாறு காண்க. உரு என்றாலும் உரும் என்றாலும் இடிக்குப் பெயர். இடியென்றே சென்னவிது அந்த ரிஷபங்களின் பயரங்கரத் தன்மையைக் காட்டும், தழுவி யென்றது மங்கலவழக்கு; வதைசெய்து என்பது தாற்பரியம்.

English Translation

O Ranga in the temple of the South! She says, "My soul!", "O spouse of Dame Earth, whom you lifted on your tusk!", "My Lord of lotus-dame Lakshmi, who rests on your chest!", "Beloved Lord of cowherd-dame, you won her by subduing seven bulls!", Alas, I cannot decipher her end

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்