விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எட்டுத் திசையும்*  எண்- இறந்த பெருந் தேவிமார்*  
    விட்டு விளங்க*  வீற்றிருந்த விமலன் மலை*  

    பட்டிப்பிடிகள்*  பகடுறிஞ்சிச் சென்று*  மாலைவாய்த்- 
    தெட்டித்திளைக்கும்*  தென்திருமாலிருஞ் சோலையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரு - பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார் - தேவியானவர்கள்
எட்டு திசையும் - எட்டுத்திக்குகளிலும்
விட்டு விளங்க - மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த - பெருமை தோற்ற எழுந்தருளியிருந்த

விளக்க உரை

கீழ்க்கதிரா மிரவியல் “பொல்லாடிவடைப் பெய்ச்சி துஞ்ச” என்ற பாட்டின் பின்னடிகளில் கூறப்பட்டுள்ள கதை. இப்பாட்டின் முன்னடிகளில் அடங்கியுள்ள தென்க தேவிமார் எட்டுத்திசையும் விட்டு விளங்க என்றது- பார்த்த பார்த்துவிடமெங்கும் தேவிமார் திரளின் பிரகாசமேயிருக்கையைக் கூறியவாறு. பட்டிமேய்ந்து திரியும் பெட்டையானைகள் இராக்காலங்களில் தம் தம் களிறுகளோடு புணர்ந்து, அதனாலுண்டாகும் ரஸம் முற்றிக் களிக்குமிடமென்று மலையின் சிறப்பைக் கூறுவது , பின்னடி (பிடி - பெண்பானை; பகடு, களிறு - ஆண் யானை.)

English Translation

Countless hordes of beautiful dames from the eight Quarters cramp the hill where the pure Lord resides. That hill is Malirumsolai where elephant-cows move hordes rubbing their sides against their bull all night and fall into rapturous delight.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்