விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
    செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
    வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
    பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னை மையல் செய்து - என்னை வியாமோஹப்படுத்தி
மனம் கவர்ந்தானே யென்னும் - மனதைக் கொள்ளை கொண்டவனே! என்கிறோள்;
மா மாயனே என்னும் - மிகப் பெரிய மாயங்களை யுடையவனே! என்கிறாள்;
செய்யவாய் மணியே என்னும் - சிவந்த அதரசோபையை உடையயையாக் கொண்டு நீலமணி போன்றவனே; என்கிறாள்;
தண் புனல் சூழ் திருஅரங்கத் துள்ளாய் என்னும் - குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்த கோயிலில் கண்வளர்ந்தருள் பவனே! என்கிறாள்;

விளக்க உரை

என் பக்கலிலே அளவுகடந்த வியாமோஹத்தைப் பண்ணி என்னை அறிவழித்து எனது மணத்தைக் கொள்ளை கொண்டவனே! என்கிறாள். அப்படி ஸம்ச்லஷிக்குமளவில் வார்த்தையருளிச் செய்யுமளவில் திருப்பவளத்திலும் திருவுடன்பிலும் பிறக்கும அழகை நினைத்துச் செய்யவாய் மணியே! என்கிறாள்; கோயிலில் கண்வளர்ந்தருளுகிறபடியை நினைத்து இக்கிடைதனக்கு உபயுக்தமாகிறதில்லையே! என்கிற பரிதாபம் தோற்ற விளிக்கின்றாள். அடியார்களுடைய ஆபத்துக்களைப் போக்குகைக்காகக் கொடியவையான திவ்யாயு தங்களை ஏந்தியிருக்கின்ற நீ என்னுடைய பிரதிபந்தகங்களை நீக்கி என்னோடே ஸம்ச்லேக்ஷிக்கிறாயல்லையே என்று இன்னாப்புத் தோற்றச் சொல்லுகிறாள். பிரானே அரவணையை விட்டு நீ பரியாதிருக்கிறாப்போலே இவளையும் விட்டும பிரியாதிருக்க படாநிற்க, இந்த கிலேசத்தைப் போக்க வழிதேடாதே படுக்கை விரித்துக் கிடந்து றங்குவதே! இஃது என்னே; இவளை இப்படி காணவைத்த பாபத்தையுடைய நான் இவள் திறத்துச் செய்யக்கூடியதை அருளிச் செய்யவேணும் என்கிறாள் தாய். “மையல் செய்தென்னை மனங் கவர்ந்தானே!” என்றவிடத்திற்குப் பிள்ளான் அருளிச் செய்வது பாரீர்;- “அதிக்ஷூத்ரமான காகத்தின் பக்கலிலே ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டருளின உன்னுடைய ஸர்வவசீகரணமான ப்ரணயித்வகுணத்தாலே என்னுடைய மநஸ்ஸை அபஹரித்தவனே!” என்று. ஒரு காகம் பிராட்டி திருமேனியிலே சிறிது நலிவை உண்டுபண்ணிற்றென்று அதன்மேலே ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டருளினமை ஸ்ரீராமாயண ப்ரஸித்தம். அல்பமான அபராதத்திற்காக இப்படிப்பட்ட மஹத்ரமான செயலைச் செய்யுமளவில் “அந்தோ! நம் மீது இப்படியும் ஒரு மையல் உண்டாவதே!” நமக்காகவன்றோ இவ்வரிய பெரிய செயல் செய்தது!” என்று நெஞ்சை பறிகொடுக்க வேண்டும்படியாகுமென்றவாறு.

English Translation

O Lord serpent-bed, grace this girl, she says; "O Lord who stole and took my heart!", "O Red-lipped gem-hued Lord!", "O Lord lying in Arangam, girdled by cool waters!" "O Celestial Lord with dagger, discus, bow, mace and conch!" Alas, my karmas are to blame

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்