விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
    வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
    அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
    சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிந்திக்கும் - (ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்;
திசைக்கும் - அறிவு அழியா நின்றாள்;
தேறும் - (திடீரென்று) தெளிவு பெறுகின்றாள்
கைகூப்பும் - அஞ்சலி பண்ணாநின்றாள்;
திரு அரங்கத்து உள்ளாய் என்னும் - கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்;

விளக்க உரை

இரணியனாகிறான் - தேவர் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியில் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம் பெற்றவன். இவன் தேவர் முதலிய யாவர்க்கும் பல பல கொடுமைகளைப் புரிந்து அனைவரும் தன்னையே கடவுளாக வணங்கும்படி செய்து வருகையில், அவன் மகனான ப்ரஹ்லாதாழ்வான் இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின கட்டளைப்டி முதலில் அவன் பெயரைச் சொல்லிக் கல்வி பக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவன் பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயண நாமம் சொல்லிலரவே கடுங்கோபங்கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன் வழிப்படுத்துவதற்குப் பலவாறு முயன்றபின் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்வதற்கு என்ன வுபாயஞ் செய்தும் அவன் பகவானுடைய அனுக்ரஹ பலத்தினால் ஒரு கேடுமின்றி யிருக்க, ஒருநாள் சாயங்காலத்திலே அந்த ஹிரண்யன் தன் புந்திரனை நோக்கி, = சொல்லும் நாராயணனென்பான் எங்கேயுளன்? காட்டு; என்ன, தூணிலுமுளன், துரும்பிலுமுளன் எங்குமுளன்” என்று உறுதியாகச் சொல்ல, உடனே அதிலிருந்து திருமால் மனுஷ்ய ரூபமும் சிங்க வடிவுங் கலந்த நரசிங்கமூர்த்தியாய்;த் தோன்றி இரணியனைப் பிடித்து வாசற்படியிர் தன் மடிமீது வைத்துக்கொண்டு தன் திருக்கையில் நயங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டு ப்ரஹைலாதனுக்கு அருள் செய்தானென்பது பிரஸித்தம். வேறொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளேவைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடச் கூடுமாகையாலே அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நாசிங்கமாய்த் தோன்றினானென்பதும் வேறு யாரேனும் கையால் தட்ட அத்தட்டியவிடத்திரலிருந்து தோன்றினால் அவர் தற்கையில நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினானர் என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டின வளவில் திருமால் தோன்றினானென்பலும்,-அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோஜீடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்னஞ் தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஞ்ஞை நிலைநிற்குமாகையாலே அதற்கு இடமில்லாதபடி அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும், -அவன் தட்டின பிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றியனால் ‘நான் தட்டினபொழுதும் எல்லாப் பொள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மைநிலையை மறுக்கக்கூடுமாகையாலே, அதற்கு இடமறும்படி கர்ப்பம், கருமுதிர்தல், ப்ரஸவித்தல் முதலியனவும் குழந்தையாய் ஜனித்தல் பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த வடிவுடையவனாய் அப்பொழுதே தோன்றின னென்பதும்-அங்ஙன தோன்றியவிடத்தும் ஹமிரண்யன ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால் ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் ஸித்தியமாமற் போய்விடுதல் பற்றி அதைவிடத் தோன்றிமலிருப்பதே நலமென்னும் படியிருக்குமாதலால் அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாவது அழித்தன னென்பதும், -தேவர், மனிதர், விலங்குகள் தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக் களிலள்ளவற்றில் ஒவ்வொன்றிலும் தனித்தனி சாகாதபடியும், ப்ரஹ்மஸருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடியும அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற பெற்ற வரம் பழுதுபடாமைக்காக நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட் படாமல் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றினனென்பதும்,- அஸ்த்ரசஸ்த்ரங்களொன்றினாலும சாகாதபடியும்; ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும் பெற்ற வரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றனனென்பதும், பகலிலுமிரவிலுஞ் சாகாதபடி பெற்றவரம் பொய்ப்படாதபடி அப்பசுலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,- பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்றவரம் மெய்யாகும்படி தம் மடிமீது வைத்துக் கொன்றனனென்பதும்,-வீட்டின் அகத்திலும் புறத்திலும் அறவாதிருக்கும்படி பெற்றவரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக் கொன்றானென்பதும் இவைபோன்ற பல விசேஷங்கள் இவ்வதாரத்திலே அருமையாக நோக்கத் தக்கவிஷயங்களாம். அயலகடல்சடைந்த ஆரமுதே-உன்னை அமுதமாக நினையாதே உப்புச் சாற்றை அமுதமதாக நினைத்து அகற்காக உன் திருமேனியை நோவுப்படுத்துமார் களுக்கோ நீ உதவலாவது? ஆராவமுதாயடியேனாவியமே தித்திப்பாய் என்றும், அமுதிலுமாற்றவினியன் என்றும இருப்பார்க்கு உகவலாகாதோ? உன்னைகிட்டி உன் சரணம் சாவதே வலித்த தையலை மையல் செய்தானே!-உன்னைக்கிட்டி உனிஸன்னிதியிலே முடியவேணுமென்று திண்ணிதான அத்யவஸாங் கொண்டிருக்கிற இவளை இப்படி அறிவு கெடுப்பதே! என்கிறாள். இங்கு ஆறாயிரப்படியருளிச்செயல்; -“உன் திருவடிகளை ஒருகால் கண்டு ஸமச்லேஷிக்க வேணுமென்னு மாசையாலே தன்னை தரித்துக் கொண்டிருக்கிற இப்பெண்பிள்ளையை இப்பாடு படுத்த வேணுமோ?”

English Translation

She falls into thought, faints and recovers; with folded hands utters,'In Arangam", bows that-a-ways with teas like rain; says, "Come, I prithee!", such and swoons. O Lord who tore Hiranya's chest, rare ambrosia who churned the ocean, you have infatuated a strong maiden; now unite her to your feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்