விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
    கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*   
    வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
    சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழுந்து உலாம் - எழுந்து உலாவுகின்றாள்;
மயங்கும் - மயங்கா நின்றாள்;
கை கூப்பும் - (அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்;
காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும் - (பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்;
கடல்வண்ணா கடியை காண் என்னும் - கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்;

விளக்க உரை

காதல் கட்டமேயென்று மூர்ச்சிக்கும்-பகவத் விஷயத்தில் காதலைத் தாங்குவது மிகவும் கஷ்டமென்கிறாள். பசியனுக்குச் சோறு கிடையாதொழிந்தால் பசிக்கு ஆற்றமாட்டாமே பரிதபிக்குமமாபோலே ஆழ்வார் தமது காதலுக்குப் பரிதபிக்கிறார் காணும். அடியிலே மயர்ஹமதிநல மருளினன் என்று பக்தியைக் கொடுத்தருளினமைக்கு உகந்து பேசினார்; இப்போது அந்த பக்திக்குத் தக்க இரை கடைக்காமையினாலே ‘அந்தோ! கஷ்டத்தையன்றோ அவன் கொடுத்தது’ என்று வெறுத்துப் பேசுகிறார். ‘பகவத் விஷயத்தில் காதலே புருஷார்த்தம்’ என்று பலகாலும் அறுதியிடுகின்ற ஆழ்வார், இப்போது ‘காதலுக்கு மேற்பட்ட ஆபத்து இல்லை’ என்று பேசுகிறபடி என்னே!. இந்த கஷ்டத்துக்குப் பரிஹாரமில்லாமையாலே (மூர்ச்சிக்கும்) ஆத்மா உள்ளவரையில் இப்படி கஷ்டமே அநுபவிக்க வேண்டியன்றோ நம் கதியாயிற்று! என்று சொல்லி மோஹியா நின்றாள். கடல்வண்ணா! கடியை காண் என்னும்-கடலானது ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யடக்கி ஒன்றையொன்று நலியாதபடி நோக்குமாபோலே நீயும் நோக்குமவன் என்பது பற்றிப் பிரானே! உன்னைக் கடல்வண்ண னென்கிறார்கள்: அப்படி நோக்குவாயல்லையே நீ; கண்ணற்றவனாயிருக்கின்றாயே! என்கிறாள். கடியை -கடியன் என்பதன் முன்னில்: நிர்க்ருணனாயிருக்கின்றாய் என்றபடி. வட்டவாய் நேமி வலங்கையாவென்னும்-கையுந் திருவாழியுமான அழகைக் காணவேணுமென்று ஆசைப்பட்டு அதைப் பூர்த்தியாகச் சொல்லமாட்டாதே நடுவேயிளைத்து அரைகுறையான சொல்லோடே முடித்து, வந்திடாயென்றென்றே மயங்குகின்றாள். ஒருகால் ‘வந்திடாய்’ என்று சொல்லி ஆறியிருக்கமாட்டாமையாலே, விடாய்த்தவன் தாஹம் தீருமளவும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்றே வாய் வெருவுமாபோலே ‘வந்திடாய் வந்திடாய் என்றே ஊடுருவச் சொல்லுகின்றாள்; அங்ஙனம் சொல்லிக்கொண்டே மயங்குகின்றாள்; மயங்கினாலும் வாஸநையாலே வாய்ச்சொல் அநுவர்த்தியாநிற்கும். சிட்டனே-சிஷ்டனென்று ஆசாரசீலனுக்குப் பெயர். இங்கு, சிஷ்ட பாவதை பண்ணியிருப்பவனே! என்று விபாறித லக்ஷ்ணையாகப் பொருள் கொள்ளவேணும். உம்மைப்போலே நாலு சிஷ்டர்கள் இருந்தால் பெண்கள் நன்றாகக் குடிவாழலாம்! என்று பரிஹஸித்துச் சொல்லுகிறபடி ‘ப்ரஹ்மஹத்யைகளைப் பண்ணிப் பூணுலீலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்ரத்தையுமிட்டு ஒத்துச் சொல்லித் திரிவாரைப் போலே யிருந்ததீ! உம்முடையபடி.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

English Translation

She remains as she is left, she rises, falls and folds her hands: "Woe, this love!", she says, then swoons; "Ocean Lord, invisible!", then "Orbed discus Lord!", she says, "Please come!", on and on, then faints, O Perfect Ranga, Lord reclining on bright waters, what do you intend for her?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்