விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
    சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 
    எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
    செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கங்குலும் பகலும் -இரவும் பகலும்
கண் துயில் அறியாள் - கண்ணுறங்கப் பெறுகின்றிலள்;
கண்ண நீர் கைகளால் இறைக்கும் - கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்;
சங்கு சக்கரங்கள்- திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன
என்று கை கூப்பும் - என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்;

விளக்க உரை

(கங்குலும் பகலும்.) பேச்சுக்கு நிலமல்லாதபடி தன் மகளுக்குண்டாயிருக்கிற நிலைமையைப் பெரியபெருமானுக்கு அறிவித்து இவள் விஷயமாக நீர் செய்தருள் நினைக்கிறது என்னோ? என்று கேட்கிறாள் ஸ்ரீபராங்குச நாயகியின் திருத்தாய். கங்குலும் பகலும் கண்துயிலறியாள்- கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்று (திருவித்தத்தில்) அருளிச் இவ்வாழ்வாரேயாதலால் இரவோடு பகலோடு வாசியறக் கண்துயிலாதே இவர்க்கு. ஸம்ஸாரிகள் உறக்கமே யாத்திரையாயிருப்பர்கள். ஆழ்வார் இந்நிலத்திலிருந்துவைத்தே இமையோர் படியாயிருப்பர். விசாரமுள்ளவர்கட்குக் கண்ணுறங்குமோ? என்றுகொல் சேர்வாந்தோ என்றும் எந்நாள்யானுங்னையினிந்து கூடுவனே என்றும் இடையறாத விசாரங்கொண்ட விவர்க்குக் கண்ணாறங்க விரகில்லையன்றோ. “கண்துயில் அறியாள்’ என்றதன் கருத்தை நம்பிள்ளை காட்டியருளுகின்றார் -“ஸம்ச்லேஷத்தில் அவன் உறங்கவொட்டான்; விச்லேஷத்தில் விரஹவ்யஸநம் உறங்கவொட்டாது; ஆகையாலே இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கமில்லாமையாலே அறியாளென்கிறது.”

English Translation

O Lord of Tiruvarangam reclining on fish-dancing waters, what have you done to my girl? She knows no sleep through night and day, she doles out tears by the handfull. She folds her hands, and says "discus", then "lotus-Lord", and swoons. "How can I live without you?", she weeps then feels the Earth

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்