விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிந்தப்புடைத்துச்*  செங்குருதிகொண்டு*  பூதங்கள்- 
  அந்திப்பலிகொடுத்து*  ஆவத்தனம்செய் அப்பன்மலை* 

  இந்திரகோபங்கள்*  எம்பெருமான் கனிவாய்ஒப்பான்* 
  சிந்தும்புறவிற்*  தென்திருமாலிருஞ்சோலையே    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அப்பன் - ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான)
மலை - மலையாவது,
இந்திர கோபங்கள் - பட்டுப் பூச்சிகளானவை
எம் பெருமான் - அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய
கனி வாய் - (கொவ்வைக்) கனிபோன்ற திருவதரத்திற்கு

விளக்க உரை

பூதயோநியாயிருக்கச் செய்தேயும், வைஷ்ணவநாம ரூபங்களோடு கூடி, பகவத்பாகவத பக்தியையுடையனவாய்த் திரியும் பூதங்கள் திருமாலிருஞ் சோலைமலையிற் பல உண்டு; அவை அத்திருமலையில் யாரேனும் ஆஸ்திகர்களாக எழுந்தருளக் கண்டால், அவர்களெதிரில் நிற்கமாட்டாமல் அஞ்ஜலி பண்ணிவிட்டு மறைந்திருக்கும்; தேஹசூபோஷணமே பண்ணித்திரியும் நாஸ்திகர்களைக் கண்டால், அவர்களை அவயங்கள் சிதற அடித்துக்கொன்று, அவர்களுடைய தேஹத்தில்நின்றும் “பெருகுகின்ற ரத்தத்தைத் தம்முடைய சாதிக்குத்தக்கபடி தாம் பருகும்போது, அதனை அழகருக்கு ஆராதநரூபேண ஸமர்ப்பித்துப் பருகிக்கொண்டு, இதுவே ஆபத்துக்கு உதவுமிடமென்று இத்திருமலையிலே வாழுமென்க.

English Translation

The Malirumsolai hill is haunted by spirits that kill and cut men, and spill blood, and then offer is as evening sacrifice to their “distress fund”. It is the hill where cochineal insects spill the red hue of the Lord’s coral lips every where.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்