விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்*  ஐம்புலன் இவை, 
    மண்ணுள் என்னைப் பெற்றால்*  என் செய்யா மற்று நீயும் விட்டால்?*
    பண்ணுளாய் கவி தன்னுளாய்!*  பத்தியின் உள்ளாய்! பரமீசனே,*  வந்து என்-
    கண்ணுளாய்!  நெஞ்சுளாய்!  சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண் உளார் - விண்ணுலகில் உள்ளவர் களாய்க்கொண்டே
பெருமாற்கு - பராத்பரனான உனக்கு
அடிமை செய்வாரையும் - அடிமைசெய்பவர் காளன நித்யஸூரிகளையும்
மண்ணுள் - இந்நிலத்திலே
செறும்- நலியக்கூடிய

விளக்க உரை

(விண்ணுளார் பெருமாற்கு.) நம்மிற் காட்டில் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று ப்ரஹித்திபெற்றவர்களையும் நலியக்கடவ இந்திரியஙகள் என்னை என்ன பாடுபடுத்தா? என்கிறார். விண்ணுளாருடைய பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் என்றும் பொருள்கொள்ளலாம்; விணணுளார்-விண்ணுலகத்திலே யிருப்ப பொருள்கொள்ளலாம். அடிமை செய்வார் என்பதற்கு—அடிமைசெய்ய ருசியுடையார் என்றும், அடிமைசெய்து கொண்டிருப்பவர்கள் என்றும் பொருள்கொள்ளலாம். ஸ்வர்க்கலோக வாஸிகளான இந்திராதி தேவர்களைக் கொள்ளவுமாம்; பரமபத வாஸிகளான கருத்மான் முதலிய நித்யஸூரிகளைக் கொள்ளவுமாம். இருவகுப்பினர் விஷயமாகவும் இரண்டு இதிஹாஸங்களை ஆசாரியர்கள் எடுத்துக்காட்டி இவ்வர்த்தத்தை மூதலிக்கின்றார்கள். நரகாஸூரனென்பவன் ப்ராக்ஜோதிஷமென்னும் பட்டணத்திலிருந்து கொண்டு ஸகல ப்ராணிகளையும் நலிந்து தேவஸித்த கந்தர்வாகிகளுடைய கன்னிகைகள் பற்பலரையும் பலாத்காரமாய் அபஹரித்துக் கொண்டுபோய்த் தான் மணம் புணர்வதாகக் கருதிக் தன் மாளிகையிற் சிறைவைத்து, வருணனது குடையையும் மந்தரகிரிசிகரமான ரத்னபருவதத்தையும் தேவமாதாவான அதிதி தேவியின் குண்டலங்களையும் கவர்ந்துபோனதுமன்றி இந்திரனுயை ஐராவத யானையையும் அடித்துக் கொண்டுபோகச் சமயம் பார்த்திருக்க, அஞ்சி வந்து பணிந்து முறையிட்ட இந்திரன் வேண்டுதளால் கண்ணபிரான் கருடனை வரவழைத்து ஸத்யபாமையுடனெதான் கருடன் மேலேறி அந்நகரத்தையடைந்து போர்செய்த நரகனைக்கொன்று, அவன் பல திசைகளிலிருந்து கொண்டவந்து சிறைப்படுக்கியிருந்த பதினாயிரத்தொரு நூறு கன்னிகைகளையும் ஆட்கொண்டு, நரசனால் முன்பு கவரப்பட்ட (இந்திரமாதாவான அதிதி தேவியின்) குண்டலங்களை அவளிடம் கொடுக்கும்பொருட்டு ஸத்யபாமையுடனே கருடன் தோள்மேல் ஏறிக்கொண்டு தேவலோகத்துக்குச் செல்ல, அங்கு இந்திராணி ஸத்யபாமைக்கு ஸகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கே உரிய பாரிஜாத புஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று ஸமர்ப்பிக்க வில்லையாதலின், அதனைக்கண்டு பாமை விருப்புற்றவளாய் நாதனை நோக்கி ‘பிராணிநாதனே! இந்தப் பாரிஜாத தருவை த்வாரகைக்குக் கொண்டு நோக்கி ‘பிராணநாதனே! இந்தப் பாரிஜாத தருவை த்வாரகைக்குக் கொண்டு போக வேண்டும், என்றதைக் கண்ணபிரான் திருச்செவிசார்த்தி உடனே வ்ருக்ஷ்த்தை வேரோடு பெயர்த்துத் கருடன் தோளின்மேல் வைத்தருளி த்வாரகைக்குக் கொண்டுபோக, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால் இந்திரன் தேவஸைன்யங்களுடனே வந்து மறித்துப் போர்செய்தான்; கண்ணபிரான் அவனை ஸகலஸைன்யங்களுடன் பங்கப்படுத்திப் பின்பு அம்மரத்தைக் கொணர்ந்து ஸத்யபாமையின் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்தில் நாட்டியருளினன் என்கிற மேல்கதை யிருக்கட்டும்; தனக்கு மஹொபகாரம் செய்தருளின பகவான் திறத்தாலே இந்திரன் த்ரோஹியானானென்பது இவ்வரலாற்றினின்று அறியத்தக்கது. “விண்ணுளாரையும் ஐம்புலன் செறும்” என்னத் தட்டுண்டோ?

English Translation

These five senses afflict even the celestials who serve and worship you. What can they not do to an earthling, more so when you too have left me? O Great Lord, you are hidden in music, in poetry and in devotion. I see you in my eyes, now in my heart, now in my speech; pray speak a word to me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்