விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூது நான் அறியாவகை*  சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி*  உன் அடிப்போது-
    நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 
    யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி*  ஓர் ஆலின் நீள் இலை,* 
    மீது சேர் குழவி!*  வினையேன் வினைதீர் மருந்தே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யாதும் யாவரும் இன்றி - சேதநாசேதநப் பொருள்களொன்றொழியாமல்
நின் அகம் பால் ஒடுக்கி- உன் திருவயிற்றின் ஏக தேசத்திலே ஒதுங்கும் படி பண்ணி
ஓர் ஆலின் நீள் இலை மீது - ஓர் ஆலமரத்தினுடைய சிறிய இலையின் மீது
சேர்குழவி - குழந்தையாய்க் கண்வளர்ந்தருளினவனே!
வினையேன் வினை தீர் மருந்தே- பாவியேனான வென்னுடைய பாவங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!

விளக்க உரை

(சூது நானறியாவகை) பீரானே! உன் திருவடிகளைப் பெறுவதற்கு உபாயம் உன் திருவடிகளே யென்றிருக்கிற இந்த என்னுடைய அறிவுங்கூட அழியும் படி இந்திரியங்களைக்கொண்டு என்னைக் கலக்கி உன் திருவடிகளைச் சேராதபடி பண்ணவா நினைத்திருக்கிறாய் என்கிறார். சூது என்பதற்கு க்ருத்ரிமம் என்கிற பொருள் உலகில் ப்ரஸித்தமானலும் அந்தப்பொருள் இங்கு விவக்ஷிதமன்று: தொழக் கருது வகே துணிவது சூதே சூதாவதென்னெஞ்ச்த் தெண்ணினேன் என்ற விடங்களில் போல இங்குப் பொருள் கொள்க. சூது-உறுவது. இவ்வாத்மாவுக்கு விஷயப்ராவண்யம் விநாச ஹேது, எம்பெருமானை யநுபவத்தாலே உஜ்ஜீவநம் என்றபிவதன்றோ உறுவது; திருவடிமலர்களை நான் கிட்டாதபடி பண்ணிக் கண்ணுக்குத் தோற்றமே கடக்க நிற்கிறயே! இது தகுதியோ வென்கிறார். போதிகண்டாய் என்ற விடத்திறகு நம்பிள்ளை யருளிச்செய்வது-“கூடகடக்கப் போவாரைப் போலே” (இதன் கருத்தாவது) கொலைப் பாதகர்களான இந்திரியங்களோடே என்னைவைத்து எவ்வளவு வதை செய்தாலும், நீ அகன்று தடையிராற்று. கூடவேயிருந்தால் தயை பண்ண வேண்டிவருமே’ என்று நினைத்து அகன்று போவரைப்போலே நீயும் அகன்று போவதனால் வருத்தம் பொறுக்கக் கூடியதாக இல்லையே! என்றவாறு.

English Translation

You planted these five senses like snares around me leaving no room for escape, you placed all things and beings without exception in your person, then slept as a child floating on a fig leaf. O The medicine for my karmas! See, you have made me incapable of joining your lotus feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்