விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேதியாநிற்கும் ஐவரால்*  வினையேனை மோதுவித்து*  உன் திருவடிச் 
    சாதியாவகை*  நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*
    ஆதி ஆகி அகல் இடம் படைத்து*  உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
    சோதி நீள் முடியாய்!*  தொண்டனேன் மதுசூதனனே!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகல் இடம் படைத்து - விஸ்தாரமான ஜகத்தை ஸ்ருஷ்டித்து
உண்டு - (பிரளயத்திலே) வயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து - பிறகு வெளிப்படுத்து (ஒரு கால்) அளந்து
இடந்திட்ட - (வரஹரூபியாய்) இடந்தவனே!
சோதி நீள் முடியாய் - உஜ்ஜ்வலமாய் நீண்ட திருவபிஷேகத்தை யுடையவனே!

விளக்க உரை

(வேதியாநிற்கும்.) ஆழ்வீர்! உம்மை நான் இந்த ப்ரக்ருதியிலே வைத்தது ஒரு ப்ரயோஜனத்துக்காகக் காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக, பிரானே! என்னை இப்படி நலிவித்து என்ன ப்ரயோஜனம் கொள்ளப் பார்க்கிறாய்? என்கிறார் ‘வேதியாநிற்கும்’; என்கிற சொல் ‘வேத:’ என்கிற வட சொல்லடியாகப் பிறந்தது. தசமீ வேதம் க்ருத்திகா வேதம் என்பது முதலான வியவஹாரங்களில் வேதபதப்ரயோகம் காண்க. வேதமாவது அடித்தல்; ஹிம்ஸித்தலென்று தாற்பரியம். இடைவீடின்றிக் கொலை பண்ணுவதையே தொழிவாகவுடைய பஞ்சேந்திரியங்களினால் என்னை க்லேசப்படுத்தி உன் திருவடிகளுக்குத் தூரஸ்தனாம்படி செய்துவைத்து என்ன ப்ரயோஜனம் பெறப் பார்க்கிறயென்கிறாலீர். முதலாடிக்கு மிக அழகிய ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்;- “யாவஜ் ஜீவமக்நி ஹோத்ரம் ஜூஹூயாத் என்றால் ஸாயம் ப்ராத: என்று ஒரு காலங்களிலே ஒதுக்கா நின்றதிறே: அங்ஙனன்றிக்கே ஸர்வாவஸ்தைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்னதெல்லாம் இவற்றின் பக்கவிலேயானபடி.. போகத்துக்குப் பாரித்ததெல்லாம் க்லேசப்படுகைக்கு உடலாவதே!. “என்று. இதன் கருத்தாவது - சாஸ்த்ரங்களில் யாவஜ்ஜீவம் அக்நிஹோத்ரம் செய்து போரவேணுமென்று சொல்லிற்று. யாவஜ்ஜீவம் உயிருள்ள வரையில் என்று பொருள். உயிருள்ளவளவும் இரவும் பகலும் அக்நிஹோத்ரம் செய்யவேணுமென்பதாகத்தோறும்; ஆனால் அப்படியில்லை; அதே சாஸ்த்ரத்தில் மற்றோரிடத்தில் ஸாயம் ப்ராதரக்நி ஹோத்ரம் ஜூஹூயாத் என்ற காலையிலும் மாலையிலும் அக்நிஹோத்ரம் செய்யும்படி விதித்திரக்கையாலே அதற்கு ஒரு காலநியதி ஏற்பட்டுவிட்டது.

English Translation

You have made these five senses stay and obstruct my path with mines. You are the first-cause, you made this universe, then spanned and lifted it. O Lord with a tall radiant crown, this servant's own Madhusudana! Alas, what have you achieved by not letting me join your feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்