விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து*  இராப்பகல் மோதுவித்திட்டு,* 
    உன்னை நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 
    கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!*  கடல் ஞாலம் காக்கின்ற* 
    மின்னு நேமியினாய்!*  வினையேனுடை வேதியனே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கன்னலேஅமுதே - பரமபோக்யனே!
கார் முகில் வண்ணனே - காளமேக நிறத்தனே!
கடல் ஞாலம் காக்கின்ற - கடல் சூழந்த வுலகங்களை ரக்ஷித்தருள்கின்ற
மின்னு நேமியினாய் - உஜ்ஜ்வலமான திருவாழியை யுடையவனே!
வினையேனுடைய வேதியனே - பாவியேனான என்திறத்தாலே எட்டாத படி வேத வேத்யனாயிருக்குமவனே!

விளக்க உரை

(என்னையாளும் வன்கோ.) எலியெலும்பனான வென்னை இந்திரியங்களாலே நோவுபடுத்தி அந்த நோவை அறிவிக்க முடியாதபடி கடக்க நிற்கிறாயே! என்கிறார். ஈச்வரன் ஸர்வ சேஷியா யிருப்பவன்; அவனுக்கு ஜீவாத்மா அடிமைப்பட்டிருப்பன்; அவனுக்கு மனஸ்ஸூ விதேயமாயிருக்கும்; மனஸ்ஸூக்கு இந்திரியங்கள் சேஷமாயிருக்கும் என்றிப்படி ஒரு முறையுண்டு; இந்த முறை கெட்டு என்னை இந்திரியங்கள் ஆளும்படியாவதே! என்கிற பரிதாபத்தைக் காட்டுகிறார் “என்னையாளும் வன்கோ ஒரைந்திவை” என்பதனால். இந்திரியங்கள் சேஷமாயிருக்கும் என்றிப்படி ஒரு முறையுண்டு; இந்த முறை கெட்டு என்னை இந்திரியங்கள் ஆளும்படியாவதே! என்கிற பரிதாபத்தைக் காட்டுகிறார். “என்னை இந்திரியங்கள் ஆளும்படியாவதே! என்கிற பரிதாபததைக் காட்டுகிறார் “என்னை யாளும் வன்கோ ஒரைந்திவை” என்பதனால். இந்திரியங்களுக்கு நான் ஆட்பட்டு அவற்றின் வழியே ஒழுக்கவேண்டும் படியான நிலத்திலே என்னை வைத்தாயே! என்று நொந்து சொல்லுகிறபடி. இப்பாட்டின் முதலடியைத் திருவுள்ளம்பற்றியே மங்கையர்கோன் தமது திருமொழியில் கோவாய் ஐவரென் மெய்குடியேறிக் கூறை சோறிவை தா வென்று குமைத்துப் போகார், நானவரைப் பொறுக்ககிலேன் என்றருளிச் செய்தார்.

English Translation

You have made five tyrant kings rute me, shooting pain night and day. O Sap of the sugarcane, my dark-hued Lord, protector of the Earth and ocean! O Bearer of the lightning-discus, O this sinner's Vedic Lord! See, you have made sure that I do not reach your lotus feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்