விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி*  என்னை உன் பாதபங்கயம்,* 
    நண்ணிலாவகையே*  நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,* 
    எண் இலாப் பெறுமாயனே!  இமையோர்கள் ஏத்தும்*  உலகம் மூன்று உடை,* 
    அண்ணலே! அமுதே! அப்பனே!*  என்னை ஆள்வானே! (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இமையோர்கள் ஏத்தும் - தேவர்களாலே துதிக்கப்படுபவனும்
உலகம் மூன்று உடை - மூவுலகங்களையும் சேஷமாசவுடையனுமான
அண்ணலே - ஸ்வாமியே!
அமுதே - பரம போக்யனே
அப்பனே - மஹோபகாரங்கள் செய்பவனே!

விளக்க உரை

(உண்ணிலாவிய.) பிரானே! உன் திருவடிகளையே சரணமாகப்பற்றின வென்னை இந்திரியங்களை யிட்டு நலியப் பார்க்கிறாயே! இது தகுதியோ? என்கிறார். பகைவர் பாஹ்ய சத்ருக்களென்றும் ஆந்தரசத்ருக்களென்றும் இருவகைப்படுவர்; ஆயுதங்களாலே நமது உடலுக்கு நலிவை விளைக்கும் பகைவர் பாஹய சத்ருக்களாவர். அப்படியன்றிக்கே கண்ணுக்குத் தெரியாதபடி உள்ளேயிருந்துகொண்டே நலிகின்ற பஞ்சேந்திரியங்கள் ஆந்தர சத்துக்களெனப்படும்: இத்தன்மையை ‘உண்ணிலாவிய வைவரால்’ என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார். அசேதநவ்களான இந்த்ரியங்களை ‘ஐந்தால்’ என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார். அசேதநங்களான இந்திரியங்களானவை அசேதனங்களைப் போலன்றிக்கே சேதநர்கள் போலவே நின்று நலியுந் தன்மையைப் பற்ற. திருமங்கையாழ்வரும் “உடனின்று ஐவரென்னுள் புகுந்து” என்றருளிச் செய்தது காண்க.

English Translation

O Lord of countless good, Lord of the three worlds, worshipped by the celestials! You heap miseries on me, through the five senses borne on this body. You are still intent on torturing me, separating me from your lotus feet. O My sweet ambrosia, My father, My Master!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்