விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்* 
    படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 
    முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
    பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று - நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து,
அருள் கொடுக்கும் - க்ருபை பண்ணுகிறவனும்
படி கேழ் இல்லா பெருமானை - சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து
முடிப்பான் சொன்ன - ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளும்

விளக்க உரை

உரை:1

(அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். எம்பெருமானுடைய திருக்கையானது திருவடியை நோக்குமாபோலே யிருப்பதுண்டே, அதற்கொரு கருத்துக்காணலாம். “அடியவர்களே! உங்களுக்கு இந்தத் திருவடியே தஞ்சம், இதன்கீழே அமர்ந்து புகுந்துயில் காட்டியருளுகிறார். பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * கீரிடம் ஸ்ரீரங்கே சயிது என்கிற ச்லோகத்தில் * நிஹீநாநாம் முக்க்யம் சரணமிதி பாஹுஸ் த்திதர ஸ்புடம் பரூதே பாதாம்புஜயுகளம் ஆஜாநுநிஹித என்றருளிச் செய்த்தும் இங்கே அநுஸந்தேயம். படிக் கேழ் இல்லாப் பெருமானை – படியென்று ஒன்பு கேழ் என்று உயர்வு ஒப்புமுயர்வு மில்லாத பெருமான் •••• பிராமாணங்கள் காண்க. அன்றிக்கே “அருள் கொடுக்கும்படிக்கு, கேழ் இல்லாப் பெருமானை“ என்றுங் கொள்ளலாம் “ஆச்ரித விஷயத்தில் அருள்கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பில்லாத ஸர்வேச்சரனை“ என்பது ஈடு. முடிப்பான் சொன்னவாயிரம் – தம்முடைய மநோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அருளிச்செய்த ஆயிரமென்று உரைத்தார்கள் சில ஆசாரியர்கள், * பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே அருளிச் செய்த வாயிரம்“ என்பர் நம்பிள்ளை.

உரை:2

அடியீர்! திருவடிகளிலே பொருந்தி புகுந்து வாழுங்கோள் என்று திருவருள் செய்கின்ற, இப்படிக்கு ஒப்பு இல்லாத திருவேங்கடமுடையானை, வயல்கள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் முடிப்பதாக அருளிச்செய்த, ஆயிரத்திலே திருவேங்கடத்தைப் பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்றவர்களைப் பற்றியவர்கள் அந்தமில் பேரின்பத் தழிவில் விட்டிலே சென்று பேரின்பத்தை அடைவார்கள்.

English Translation

This decad of the complete thousand songs by Kurugur Satakopan on Venkatam Lord –who gives refuge to devotees of his feet, -will secure the joy of Vaikunta forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்