விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
    நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 
    நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார்
இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு
இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு
உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே!
நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே!

விளக்க உரை

சிறிது நேரமும் விட்டுப் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவனே! ஒப்பில்லாத புகழையுடையவனே! மூன்று உலகங்களையுமுடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்தியசூரிகளும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! வேறுகதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்கிறார்.

English Translation

O Lord, you bear the inseparable lotus-dame on your chest! O My Master of matchless fame, bearing the three worlds, O Lord of Venkatam desired by celestials and great sages! Falling of your feet, this refugeless self has found his refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்