விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-
  சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை* 
  அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்* 
  சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குறுநாத - திருமலை
மன்னரை - அரசர்களுடைய
கூடு - இருப்பிடத்தை
கலக்கி - குலைத்து (அழித்து)
வெம் - தீக்ஷ்ணமான

விளக்க உரை

திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற அஹங்காரிகளைக் குடியழித்துக் காட்டில் ஒட்டியருளும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் மலை என்பது, முன்னடிகளின் கருத்து. சிறு கால் நெறி - கொடிவழி யென்பது தேர்ந்த பொருள்; ‘நேர்வழியே போனால் யாரேனும் பின்தொடர்ந்து நவியக்கூடும்’ என்றஞ்சிக் கொடிவழியே ஓடுவார்களாம். பின்னடிகளுக்கு உள்ளுறை பொருள்; ஸ்வாபதேசத்தில், திருப்பானாழ்வார், தம்பிரான்மார் போல்வாரை வண்டு என்கிறது. வண்டுகள் தேனைவிட்டு மற்றொள்றைப் பருகமாட்டாமையாலே மதுவ்ரத மென்று பெயர் பெறும்; இவர்களும் “உளங்கனிந்திருக்கு மடியவர் தங்களுள்ளத்துளூறிய தேனை” என்ற பகவத் விஷயமாகிற தேனைவிட்டு மற்றொன்றை விரும்பார்கள். வண்டுகள் (ஆறுகால்களை யுடைமையால்) ஷட்பத நிஷ்ட்டமெனப்படும்; இவர்களும் ஷட்பதம் நிஷ்ட்டர்கள்; ஷட்பதம்-த்வயம்- த்வயம்; அதாவது - “ஸ்ரீமந்நாராயண சரணௌ கரணம் ப்ரபத்யே, “ஸ்ரீமதே நாராயணாயநம:” என்ற இரண்டு வாக்கியம். இப்படி த்வயா நுஸந்தரநபார்களான மஹாநுபாவர்கள்எம்பெருமானுடைய திருநாமங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிற்றஞ் சிறுகாலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு.

English Translation

The golden hill of Malirumsolai is the resort of our dear Lord who stirs up the haunts of enemy kings and sends them scuttling through narrow tracks in the dense forest, where six-legged bumble-bees wake up early in the morning and sonorously chant the Lord’s thousand names.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்