விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோலாது ஆற்றேன் உன பாதம்*  காண என்று நுண் உணர்வின்,* 
    நீல் ஆர் கண்டத்து அம்மானும்*  நிறை நான்முகனும் இந்திரனும்,* 
    சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போலே வாராயே.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும்
நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும்
இந்திரனும் - தேவேந்திரனும்
உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு
சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து

விளக்க உரை

உனது திருவடிகளைக் காண்கைக்குரிய சாதனம் ஒன்றையும் செய்யாமலே வைத்தும் ஆற்ற மாட்டுகின்றிலேன் என்று, நுண்ணிய அறிவினையும் விஷம்பொருந்திய கழுத்தினையுமுடைய சிவபெருமானும் குணங்கள் நிறைந்த பிரமனும் இந்திரனும் ஆகிய தேவர்கள், சேல்போன்ற கண்களையுடைய பெண்கள் பலரும் தங்களைச் சூழ்ந்து நிற்க வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! எல்லாரையும் மயக்கிக் கிருஷ்ணனாய் வந்தாற்போலே அடியேன் பக்கலிலும் வரவேண்டும்.

English Translation

Alas, undeservingly I crave and grieve for your lotus feet! The blue-throated Siva, the four-faced Brahma, the subtle-minded Indra and many fish-eyed damsels surround you desirously forever. O Lord of Venkatam, pray come as you did then, and bewitch me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்