விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
    கொடியா அடு புள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,* 
    செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    நொடி ஆர் பொழுதும் உன பாதம்*   காண நோலாது ஆற்றேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே!
இமையோர் அதிபதியே - தேவாதி தேவனே!
அடு புள் கொடி ஆ உடையானே - (பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே!
கோலம் கனிவாய் பெருமானே - அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே!
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே - செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!

விளக்க உரை

அடியேன் அடைந்து அநுபவிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! பகைவர்களைக் கொல்லுகின்ற கருடனைக் கொடியில் உடையவனே! அழகிய கோவைக்கனிபோன்ற திருவாயினையுடைய பெருமானே! தூறுமண்டிக் கிடக்கின்ற தீவினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! ஒரு சாதன அநுஷ்டானத்தைச் செய்யாதிருந்துங்கூட, உனது திருவடிகளைக் காண்பதற்குக் கணநேரமும் ஆற்றமாட்டேன்.

English Translation

O Lord of celestials, my ambrosia, staying for the love of me! O Lord of Garuda-banner, Lord with beautiful berry lips! O Lord of Venkatam, cure for the weeds of Karma! No more can I rest without seeing your lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்