விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ,எந்நாளே நாம் மண் அளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,* 
    எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி*  இறைஞ்சி இனம் இனமாய்,*
    மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்*  திருவேங்கடத்தானே,* 
    மெய்ந் நான் எய்தி எந்நாள்*  உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண் அளந்த தாமரைகள் இணை - உலகமளந்த உபயபாதங்களை
நாம் காண்பதற்கு எந்நாள் என்று - நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று
இமையோர்கள் - நித்யஸூரிகள்
எந்நாளும் நின்று ஏத்தி - நிரந்தரமாக நின்று துதித்து
இறைஞ்சி - வணங்கி

விளக்க உரை

உலகத்தை அளந்த இரண்டு திருவடிகளைக் காண்பதற்கு எந்த நாளையுடையோம் நாம் என்று தேவர்கள் கூட்டம்கூட்டமாக எப்பொழுதும் நின்றுகொண்டு துதித்து வணங்கிச் சரீரத்தாலும் நாக்காலும் மனத்தாலும் வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அடியேனாகிய நான் உண்மையாகவே உன்னை அடைந்து உன் திருவடிகளை அடைவது எந்த நாள்? என்கிறார்.

English Translation

O Lord of venkatam whom celestials worship everyday, through thought, world, deed, and praise! I long to see the lotus-feet that spanned the Earth. O, when will the day be when I join you inseparably?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்