விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்*  அசுரர் வாழ் நாள்மேல்,* 
    தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!*  திரு மா மகள் கேள்வா-
    தேவா*  சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    பூ ஆர் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆ ஆ என்னாது - இரக்கமில்லாமல்
உலகத்தை அலைக்கும் - உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான
அசுரர் - ஆஸுரப்ரக்ருதிகளினுடைய
வாழ்நாள் மேல் - ஆயுளை முடிப்பதற்காக
தீ வாய் வாளி - நெருப்பை உமிழ்கிற அம்புகளை

விளக்க உரை

ஐயோ! ஐயோ! என்று இரங்காமல் உலகத்திலுள்ளாரை வருத்துகின்ற அசுரர்களுடைய வாழ்நாளின் மேலே, நெருப்பினை வாயிலேயுடைய பாணங்களை மழையைப்போன்று பொழிந்த வில்லையுடையவனே! திருமகள் கேள்வனே! தேவனே! தேவர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! போக்கற்கு அரிய வினைகளையுடைய அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்கவேண்டும்.

English Translation

O Lord of lotus-dame Lakshmi, you rained fire-arrows ending the days of the heartless. Asuras who troubled the Earth! O Lord of Venkatam adored by gods, Asuras and Munis! Pray show this lowly self the way to your lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்