விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!*  மாய அம்மானே,*
    எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
    தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்*  திருவேங்கடத்தானே,* 
    அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆஆ என்னாயே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்ணம் அருள் கொள் - அருளே வடிவெடுத்த வண்ணமாய்
அணி பேகம் வண்ணா - அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே!
மாயம் அம்மானே - ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே!
இமையோர் அதிபதியே - தேவாதிதேவனே!

விளக்க உரை

கண்டார் மனம் மயக்கத்தைக் கொள்ளுதற்குக் காரணமான வடிவையுடைய அழகிய மேகவண்ணா! ஆச்சரியத்தையுடைய அம்மானே! மனத்திலே புகுந்து இனிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! தெளிந்த நல்ல அருவிகளானவை மணிகளையும் பொன்னையும் முத்துக்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அண்ணலே! உன் திருவடிகளைச் சேர்வதற்கு, உனக்கு அடிமைப்பட்ட எனக்கு ஐயோ! ஐயோ!! என்று திருவுள்ளம் இரங்கியருள்வாய்.

English Translation

O Lord of celestials, beautiful cloud-hued natural grace, O Ambrosia! Wonder-Lord, entering sweetly into feeling! O Lord of Venkatam where rivulets wash gems, pearls and gold! My Lord, inquire of me and grant me your lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்