விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
    நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆர் உயிரே,* 
    திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி- அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
நெடியாய் - மிகப்பெரியோனே!
அடியேன் ஆர் உயிரே -அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே!
உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற

விளக்க உரை

பிரளயகாலத்தில் உலகத்தை எல்லாம் புசித்த பெரிய திருவாயினையுடையவனே! அழிதல் இல்லாத கீர்த்தியையுடைய அம்மானே! எப்பொழுதும் நிலைபெற்றிருக்கின்ற சுடர்கள் சூழ்ந்திருக்கின்ற ஒளியையுடைய மூர்த்தியே! நெடியோனே! அடியேனுக்கு அரிய உயிராக இருப்பவனே! உலகத்திற்கெல்லாம் திலதம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! தொன்றுதொட்டே வருகின்ற தொண்டக்குலத்திலே பிறந்த அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சேரும்வகை கூறியருள வேண்டும்.

English Translation

O Lord of eternal glory who swallowed the Earth! O Great icon of effulgent knowledge, my soul's master! You stand like a Tilaka for the Earth in Venkatam, Pray decree that this bonded serf reaches your lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்