விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குறுகா நீளா*  இறுதிகூடா எனை ஊழி,* 
    சிறுகா பெருகா*  அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,* 
    மறு கால் இன்றி மாயோன்*  உனக்கே ஆளாகும்,* 
    சிறு காலத்தை உறுமோ*  அந்தோ தெரியிலே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயோன் - ஆச்சரியமானவனே!
குறுகா நீளா - ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும்
இறுதி கூடா - முடிவுமில்லாமலும்
எனை ஊழி - எக்காலத்திலும்
சிறுகா பெருகா - க்ஷய வ்ருத்திகளில்லாமலும்

விளக்க உரை

மாயோனே! இயல்பாகக் குறைவதும் பெருகுவதும் இல்லாததும், முடிவு இல்லாததும், எத்துணைக் கற்பங்கள் சென்றாலும் கால வேறுபாட்டினால் குறைவதும் பெருகுவதும் இல்லாததும் அளவு இல்லாததுமான சிற்றின்பமாகிய ஆத்ம அநுபவம் சேர்ந்தாலும், தெளிந்து பார்க்குமிடத்து மறுபடியும் ஒருகாலம் இல்லாமல் உனக்கே கைங்கரியத்தைச் செய்கின்ற சிறிய காலத்தை அது ஒக்குமோ?

English Translation

My Lord1 For many endless ages that neither shrink nor stretch, if I were to attain the infinite pleasures of the self, -Alas! On reflection –will that ever match even a short while of service to you without returns?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்