விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உலகில் திரியும் கரும கதி ஆய்*  உலகம் ஆய்,* 
    உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்*  புற அண்டத்து,* 
    அலகில் பொலிந்த*  திசை பத்து ஆய அருவேயோ,* 
    அலகில் பொலிந்த*  அறிவிலேனுக்கு அருளாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகில் திரியும் கருமம் கதி ஆய் - லோகத்தில் வியாபரிக்கிற ஸாதன கர்மஸ்வரூபியாயும்
உலகம் ஆய் - அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் - ஸர்வலோகங்களுக்கும் எகாத்மாவாயும் நிற்பவனே!
புறம் அண்டத்து - அண்டங்களுக்கு வெளிப்பட்டிருப்பவர்களாய்
அலகு இல் பொலிந்த - எண்ணிக்கையில்லாதபடி விளங்குபவர்களாய்

விளக்க உரை

உலகத்திலே சஞ்சரிக்கின்ற கருமங்களாகிற உபாயங்களாய், அந்த உபாயங்களைச் செய்கின்றவர்களுமாய், உலகத்திலேயுள்ள எல்லாப்பொருள்கட்கும் ஓர் உயிர் ஆனவனே! அண்டத்துக்கு மேலே உள்ள கணக்கு இல்லாதவர்களாய் விளங்குகின்ற பத்துத் திக்குக்களிலும் பரந்திருக்கின்ற முக்தர்களைப் பிரகாரமாகவுடையவனே! எண்ணிறந்து விளங்குகின்ற அறிவில்லாத எனக்குத் திருவருள்புரிய வேண்டும்,

English Translation

You are the karmic souls roaming the Earth, You are the soul of the world itself. You are the formless ten spheres and the spirit beyond, Pray grace this tiny self of infinite ignorance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்