விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்*  பரவை நிலம் எல்லாம்- 
    தாயோர்,*  ஓர் அடியால்*  எல்லா உலகும் தடவந்த- 
    மாயோன்,*  உன்னைக் காண்பான்*  வருந்தி எனைநாளும்,* 
    தீயோடு உடன்சேர் மெழுகாய்*  உலகில் திரிவேனோ?    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் அடி - ஒரு திருவடியை
பாய் வைத்து - பரப்பிவைத்து
பாவை நிலம் எல்லாம் - கடல் சூழ்ந்த ஸகல பூமியும்
அதன் கீழ் - அந்தத் திருவடியின்கீழே யாம்படி
தாய் - தாவியளந்து,

விளக்க உரை

 ஒரு திருவடியைப் பரப்பிக் கடலால் சூழப்பட்ட உலகங்கள் எல்லாம் அத் திருவடியின் கீழே ஆம்படி தாவி அளந்து, மற்றொரு திருவடியால் மேல் உலகங்கள் எல்லாவற்றையும் தடவின மாயோனே! உன்னைக் காணும்பொருட்டு வருந்தி எல்லாக் காலத்திலும் தீயின் அருகில் சேர்ந்த மெழுகைப் போன்று உலகத்தில் திரியக் கடவேனோ?

English Translation

With one step you strode the Earth and Ocean, With one step you spread and took the worlds above. O Lord, how many days must I yearn to see you? Alas! I melt like wax in fire and roam the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்