விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தளர்ந்தும் முறிந்தும்*  சகட அசுரர் உடல் வேறாப்,* 
    பிளந்து வீய*  திருக்கால் ஆண்ட பெருமானே,* 
    கிளர்ந்து பிரமன் சிவன்*  இந்திரன் விண்ணவர் சூழ,* 
    விளங்க ஒருநாள்*  காண வாராய் விண்மீதே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சகடம் அசுரர் உடல் - சகடாசுரனுடைய உடலானது
தளர்ந்தும் முறிந்தும் - சின்ன பின்னமாகி
வேறு ஆ பிளந்து வீய - இருபிளவாகி உருமாய்ந்தொழியும்படியாக
திரு கால் ஆண்ட பெருமானே - திருவடிகளைக் கொண்டு காரியங் கொண்ட ஸ்வாமியே!
பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் - பிரமன் முதலான தேவர்களெல்லாம்

விளக்க உரை

 சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம்கொண்ட பெருமானே! பிரமன் சிவன் இந்திரன் மற்றைத்தேவர்கள் இவர்கள் கிளர்ந்து சூழ்ந்து சேவிக்க, உன் முதன்மைதோன்றும்படி நான் காண விண்மீதே ஒரு நாள் வாராய் என்க.
 

English Translation

You twisted, mangled and destroyed the Asuras, you smote a devil-cart with your foot. At least appear in the sky one day, surrounded by Brahma, Siva, Indra and all the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்