விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்ணும் விண்ணும் மகிழ*  குறள் ஆய் வலம் காட்டி,* 
    மண்ணும் விண்ணும் கொண்ட*  மாய அம்மானே,* 
    நண்ணி உனை நான்*  கண்டு உகந்து கூத்தாட,* 
    நண்ணி ஒருநாள்*  ஞாலத்தூடே நடவாயே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணும் விண்ணும் மகிழ - உபய விபூதியும் (அழகு கண்டு) உகக்கும்படி
குறள் ஆய் - வாமனமூர்த்தியாய் (மாவலியிடம் சென்று)
வலம் பாட்டி - தன்னுடைய சக்தியக்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட - மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட
மாயம் அம்மானே - அற்புதனான ஸ்வாமியே!

விளக்க உரை

மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாக வாமனாவதாரமாகி வலியைக் காட்டி மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட ஆச்சரியத்தையுடைய அம்மானே! நான் உன்னை அடைந்து கண்டு மகிழ்ந்து கூத்தாடும்படியாக நீ தானே வந்து கிட்டி இந்தப் பூமியிலே ஒருநாள் நடந்துவரல் வேண்டும்.

English Translation

O wonder-Lord who took the Earth and sky! You came as Vamana, and showed your power on Earth, Pray walk this Earth again one day, Come, let me touch and see you, and dance in joy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்