விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீராய் நிலனாய்*  தீயாய் காலாய் நெடுவானாய்,* 
    சீரார் சுடர்கள் இரண்டாய்*  சிவனாய் அயனானாய்,* 
    கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி*  கொடியேன்பால் 
    வாராய்,*  ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் கெடு வான் ஆய் - பஞ்ச பூதஸ்வரூபியும்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய் - சந்திரஸூர்யர்களாகிற சிறந்த தேஜ பதார்த்தஸ்வரூபியும்
சிவன் ஆய் -சிவனுக்கு அந்தர்யாமியும்
அயன் ஆனாய் - பிரமனுக்கு அந்தர்யாமியுமாயிருக்கும் எம்பெருமான்!
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி- கூர்மைபொருந்திய திருவாழியையும் வெள்ளிய திருச்சங்கையும் திருக்கையில்ரித்துக்கொண்டு

விளக்க உரை

தண்ணீராகிப் பூமியாகி நெருப்பாகிக் காற்றாகி நீண்ட ஆகாசமாகிச் சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாகிச் சிவனாகிப் பிரமன் ஆனாய்; மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாகக் கொடியேனாகிய அடியேனிடத்து, கூர்மைபொருந்திய சக்கரத்தையும் வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக்கொண்டு ஒருநாள் வரவேண்டும்.

English Translation

O Lord, you became the radiant orbs, Siva and Brahma, Earth, Water, Fire, Wind and sky, Will you not come to this wicked self one day, with your conch and discus in hand, and let Heaven and Earth rejoice?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்