விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாசறவு எய்தி இன்னே*  வினையேன் எனை ஊழி நைவேன்?* 
    ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!*  அருள்செய்து ஒருநாள்,* 
    மாசு அறு நீலச்சுடர்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    ஏசு அறும் நும்மை அல்லால்*  மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆக அறு தூவி - பழிப்பற்ற சிறகையுடைய
வெள்ளை குருகே - பரிசுத்தமான குருகே!
வினையேன் - பாலியான நான்
பாசறவு எய்தி - நிறமழிந்து
இன்னே - இவ்வண்ணமாகவே

விளக்க உரை

குற்றம் நீங்கிய சிறகுகளையுடைய வெண்மைநிறம் பொருந்திய குருகே! உறவினர்கள் பக்கல் பற்று அற்று, இப்படியே எத்தனை ஊழிக்காலம் வருந்துவேன் வினையேன்? குற்றம் நீங்கிய நீலச் சுடரையுடைய முடியைத் தரித்த நித்திய சூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானைக் கண்டு, குற்றம் நீங்கிய நும்மை அல்லாமல் பின்னர் வேறு ஒரு பொருளை மறித்துப் பார்ப்பது இல்லாதவளானாள் என்று என் மாட்டு அருள்செய்து ஒருநாள் கூறவேண்டும் என்கிறாள்.

English Translation

O Perfect-winged white egret, pray help me! How many ages must I suffer thus, bereft of my love? Go see the heedless Lord of spotless hue and radiant crown, and say, "This maiden sees no one save you".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்