விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூவைகள் போல் நிறத்தன்*  புண்டரீகங்கள் போலும் கண்ணன்,* 
    யாவையும் யாவரும் ஆய்*  நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,* 
    மாவை வல் வாய் பிளந்த*  மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,* 
    பாவைகள்! தீர்க்கிற்றிரே*  வினையாட்டியேன் பாசறவே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாவைகள் - எனது லீலோபகரணங்களான மாப்பாச்சிகளே!
பூவைகள் போல நிறத்தன் -பூவைப்பூவண்ணனும்
புண்டரீகங்கள் போலும் கண்ணன்-புண்டரீகாக்ஷனும்
யாவையும் யாவரம ஆய்நின்ற  - ஸகல சேதநாசேதந ஸ்வரூபியும்
மாயன் - ஆச்சர்ய சக்தியுக்தனும்

விளக்க உரை

பாவைகளே! காயாம்பூவைப்போன்ற திருநிறத்தையுடையவன், செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களையுடையவன், அஃறிணைப் பொருளும் உயர்திணைப்பொருளுமாகி நின்ற மாயவன், என் ஆழிப்பிரான், குதிரைவடிவம்கொண்டு வந்த கேசியினது வலிய வாயினைப் பிளந்த மதுசூதனன் ஆன எம்பெருமானுக்கு நான்சொல்லிய வார்த்தையைச் சொல்லி வினையாட்டியேனுடைய துக்கத்தைத் தீர்க்கின்றீர்களா? என்கிறாள்.

English Translation

O My pet dolls! Would you not go to Madusudana,-who ripped the horse's jaws, -deliver my message, and end my sorry plight? My Lord is dark like the Prvai flower, he has eyes like lotus petals, he is the discus-Lord who stands as everyone and everything.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்