விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்*  யான் வளர்த்த கிளிகாள்,* 
    வெம் கண் புள் ஊர்ந்து வந்து*  வினையேனை நெஞ்சம் கவர்ந்த* 
    செங்கண் கருமுகிலை*  செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,* 
    எங்குச் சென்றாகிலும் கண்டு*  இதுவோ தக்கவாறு என்மினே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யான் வளர்த்த கிளிகாள் - நான் வளர்க்க வளர்ந்த கிளிகளே!
வம்மின் - இப்படி வாருங்கள்
நுங்கட்கு யான் உரைக்கேன் - உங்களுக்கு நான் ஒன்றுசொல்லுகிறேன்.
வெம் கண் புள் - வெவ்விய கண்ணையுடைய பெரிய திருவடியை
ஊர்ந்து வந்து - நடத்திக்கொண்டு என் பக்கலிலே வந்து

விளக்க உரை

யான் வளர்த்த கிளிகாள்! உங்களுக்கு யான் ஒன்று சொல்லுகிறேன் வாருங்கோள்; கொடிய கண்களையுடைய பெரிய திருவடியை ஊர்ந்து வந்து, தீவினையேனாகிய என்னுடைய நெஞ்சினைக் கவர்ந்த சிவந்த திருக்கண்களையுடைய கரிய மேகம் போன்றவனை, சிவந்த திருவாயினையுடைய செழுமைபொருந்திய கற்பகம் போன்றவனை எங்கே சென்றாகிலும் கண்டு, தகுதி இதுவோதான் என்று சொல்லுங்கோள்.

English Translation

O Parrots, I brought you up; now let me teach you something. The Lord came riding on his Garuda and stole my wicked heart. He has red eyes and lips, a dark hue and rises like a Kalipa trees. Go seek him wherever he is, then say to him, "This is the proper way".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்