விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூமதுவாய்கள் கொண்டுவந்து*  என் முல்லைகள்மேல் தும்பிகாள்,* 
    பூ மது உண்ணச் செல்லில்*  வினையேனைப் பொய்செய்து அகன்ற,*
    மாமதுவார் தண்துழாய்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்*  கண்டீர் நுங்கட்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முல்லைகள் மேல் - முல்லைப்பூக்களிலே வாழ்கிற
என் தும்பிகாள் - எனக்கு இனிய தும்பிகளே!
தூ மது வாய்கள் - தூய மதுவிலே படியவேண்டிய வாயைக்கொண்டுவந்து
பூ மது உண்ண செல்லில்- அந்த முல்லைப்பூக்களில் மதுவை யுண்ணச் செல்ல நினைத்திர்களாகில் (அதற்காக நீங்கள் செய்யவேண்டியதொன்றுண்டு அது என்னென்னில்)

விளக்க உரை

 நான் வளர்க்கிற முல்லைகளின்மேலே தங்கியிருக்கின்ற தும்பிகளே! பூக்களிலேயுள்ள மதுவினை உண்ணுவதற்குச் சென்றால், பரிசுத்தமான இனிய வார்த்தைகளோடு சென்று, தீயவினைகளையுடைய என்னிடத்தில் பொய்யான கலவிகளைச்செய்து நீங்கிய, சிறந்த மதுவானது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய்மாலையைத் தரித்த திருமுடியையுடைய நித்தியசூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானை நீங்கள் கண்டு, உமக்கு இதுவோ தக்கவாறு என்று கூறவேண்டும்.

English Translation

O Bumble-bees! Take note, if you wish to sip the nectar from my Mullai flowers, go seek the Lord who played false and deserted me. He wears the fragrant Tulasi on his crown, Tell him, this is no way to treat a lover.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்