விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓடிவந்து என் குழல்மேல்*  ஒளிமாமலர் ஊதீரோ,* 
    கூடிய வண்டினங்காள்!*  குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்* 
    ஆடிய மா நெடும் தேர்ப்படை*  நீறு எழச் செற்ற பிரான்,* 
    சூடிய தண் துளவம் உண்ட*  தூமது வாய்கள் கொண்டே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூடிய வண்டு இனங்காள் - கூடிக் களித்திருக்கின்ற வண்டுத்திரள்களே!
குருநாடு உடைய ஜவர்கட்கு ஆய் - குருக்ஷேத்திரத் தலைவர்களான பஞ்சபாண்டவர்களுக்காக
ஆடிய மா நெடு தேர்படை - ஆடலில் சிறந்த குதிரைகளையும்பெரிய தேர்களையும் மற்றுமுள்ள சேனைகளையும்
நீறு எழ சென்ற - பொடியாம்படி முடித்த
பிரான் - எம்பெருமான்
சூடிய - திருக்குழலில் அணிந்துகொண்டிருக்கிற

விளக்க உரை

சேர்ந்திருக்கின்ற வண்டுக்கூட்டங்களே! குருநாட்டினையுடைய பாண்டவர்களுக்காக, வெற்றிபொருந்திய குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினாலே சேனைகள் சாம்பலாகும்படி அழித்த கண்ணபிரான் அணிந்து கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயிலேயுள்ள தேனைப் புசித்த பரிசுத்தமான தேன் பொருந்திய வாய்களைக்கொண்டு, ஓடிவந்து என்கூந்தலின்மேல் உள்ள ஒளிபொருந்திய சிறந்த பூக்களில் ஊதுவீர்களாக.

English Translation

O Gregarious bees, go drink the nectar from the Tulasi flowers worn by the Lord, -he steered the chariot for the Pandavas against the great army in war, -come back quickly and blow his fragrance over my coiffure flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்