விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மையமர் வாள் நெடும்கண்*  மங்கைமார் முன்பு என் கை இருந்து,* 
    நெய்யமர் இன் அடிசில்*  நிச்சல் பாலொடு மேவீரோ,* 
    கையமர் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    மெய்யமர் காதல் சொல்லி*  கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கிளிகாள் - கிளிகளே!
கை அமர் சக்கரம் - திருக்கையில் அமர்ந்த திருவாழியையுடையனும்
கனி வாய் - கொவ்வைக்கனிபோன்ற அதரத்தை யுடையனுமான
என் பெருமானைகண்டு - எம்பெருமானைச் சேவித்து
மெய் அமர் காதல் சொல்லி - உடம்போடே அணையவேண்டும்படி எனக்குண்டாயிருக்கிற என் காதலைத் தெரிவித்து

விளக்க உரை

(மையமர்வாள்) என்னுடைய ஆற்றாமையை எம்பெருமானுக்கு அறிவித்துவந்து, நானும் என் தோழிமாரும். கொண்டாட அத்தை அங்கீகரிக்க வேணுமென்று சில கிளிகளை நோக்கி வேண்டுகின்றாள். தலைவிதான் செய்ய நினைத்திருக்கும் கைம்மாறுதன்னை முந்துற முன்பாகவத ஸத்காரமே தனக்குப் பரமோத்தேச்யமென்னுமிடம் காட்டப்பட்டது. கீழ்ப்பாட்டிலே உபயவிபூதியையும் கொடுப்பதாகச் சொல்லியற்ற பிறகு இனிமேல் கொடுக்கக்கூடியது என்ன இருக்கிறது? என்று சிலர் சங்கிக்க நேரும். அதற்குப் பரிஹாரமாக நம்பிள்ளை யபதம் தேடிக்கொடுக்கிறாள் இப்பாட்டில். அவன் பதமாகிறது உபயவிபூதியுமிறே. அதுக்கு மேலான பதமாகிறது அவனாலே விரும்பப்படும் தன்னைக் கொடுக்கை. தன்னைக் கொடுக்குமிடத்திலும் பின்னை முன்னே யென்னாதே எல்லாருங் காணக் கைமேலேயிறே கொடுக்கப்புகுகிறது.“ மையமர்வாள் நெடுங்கண் மங்கைமார்முன்பு –இவ்வாக்கியம் அவசியம் வேணுமோ? “என் கையிருந்து“ என்றால் போராதோ? என்னில், பரிஜனங்களோடே கூடிக்குலாவி ஸத்கரிக்க வேணுமென்று ஆசையாகையாலே அது தன்னைக் காட்டுகிறபடி. மையணிந்த நெடுங்கண்களையுடைய மங்கைமார்களென்றதற்கு அழகிய ஸ்வாபதேசார்த்தம் குறிக்கொள்க. * மநஸி விலஸதாக்ஷ்ணா பக்திஸித்தாஞ்ஸநேந * என்று பட்டரும், * ஸித்தாஞ்ஜநேந பவதைவ விபூஷி தாக்ஷா * என்று தேசிகனும் பணித்தபடியே பக்தியை மையென்கிறது. கண் என்கிறது ஞானத்தை பக்தி பரிகார்மிதமான ஞானத்தையுடையார் என்றபடி.

English Translation

O My parrots, before Vel-eyed damsels I swear, I will give you sweet butter-filled pudding with my hands, Pray seek my discus-bearing lord of berry lips. Tell him of my love and come back to me quickly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்