விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன் உலகு ஆளீரோ?*  புவனி முழுது ஆளீரோ?,* 
    நல் நலப் புள்ளினங்காள்!*  வினையாட்டியேன் நான் இரந்தேன்,*
    முன் உலகங்கள் எல்லாம் படைத்த*  முகில்வண்ணன் கண்ணன்,* 
    என் நலம் கொண்ட பிரான் தனக்கு*  என் நிலைமை உரைத்தே?.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் நலன் புள் இனங்காள் - சிறந்த நற்குணமுடைய பறவைத்திரள்களே!
விளையாட்டியேன் நான் இரந்தேன் - பிரிவாற்றாமைக்குரிய பாபத்தைப்பண்ணினநான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (எதற்காகவென்னில்)
முன் உலகங்கள் எல்லாம் படைத்த - முதலில் உலகங்களை யெல்லாம் உண்டாக்கின
முகில் வண்ணன் - காளமேக நிறத்தனாயும்

விளக்க உரை

 சிறந்த குணங்களையுடைய பறவைக் கூட்டங்களே! தீவினையேனாகிய நான் உங்களை இரக்கின்றேன்; ஆதிகாலத்தில் எல்லாஉலகங்களையும் படைத்த முகில்வண்ணனும் கண்ணபிரானும் என்னுடைய நலத்தை எல்லாம் கொண்ட உபகாரகனுமான எம்பெருமானுக்கு, என்னுடைய நிலையைச் சொல்லுங்கோள்; அவ்வாறு சொல்லி, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பரமபதத்தையும் மற்றுமுள்ள எல்லா உலகங்களையும் நான் கொடுக்க நீங்கள் ஆளுங்கோள் என்கிறாள்.

English Translation

O Good birds flocking together! May you rule the golden heaven and the Earth, This hapless lover beseeches you, my Krishna made the worlds and stole my well being. Pray go and tell him of my plight.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்