விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒருவாரணம் பணிகொண்டவன்*  பொய்கையில் கஞ்சன்தன்- 
  ஒருவாரணம் உயிர்உண்டவன்*  சென்றுறையும்மலை*
  கருவாரணம்*  தன்பிடிதுறந்துஓடக்*  கடல்வண்ணன்- 
  திருவாணைகூறத்திரியும்*  தண் மாலிருஞ்சோலையே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு வாரணம் - (ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து
பணி - கைங்கரியத்தை
கொண்டவன் - ஸ்வீகரித்தருளினவனும்
கஞ்சன் தன் - கம்ஸனுடைய
ஒரு வாரணம் - (குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய

விளக்க உரை

முன்னடிகளிடங்கிய இரண்டு வரலாறுகளுள் கீழ்விரிந்துரைக்கப்பட்டுள்ளன. வாரணம்- வடசொல். “ஆனைகாத்தொரானைகொன்று” என்ற திருச்சந்த விருத்தத்தை ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கவை, முன்னடிகளென்க. (ஒருவாரண மித்யாதி.) ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக்கொன்றான்; ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றான்;- (அர்ஜுநனும் சிசுபாலனும்.) ஒரு ராக்ஷஸனைக் காத்து, ஒரு ராக்ஷஸனைக் கொன்றான்; (விபீஷணனும் ராவணனும்.) ஒரு குரங்கைக் காத்து, ஒரு குரங்கைக் கொன்றான்; (ஸுக்ரீவனும் வாலியும்) ஒரு பெண்ணைக் காத்து, ஒரு பெண்ணைக்கொன்றான்; (அஹல்யையும் தாடகையும்.) ஒரு அம்மானைக் காத்து, ஒரு அம்மானைக் கொன்றான்; (யசோதைக்கு உடன் பிறந்தவரும் நப்பின்னை தந்தையுமாகிய கும்பரும், கம்ஸனும்) என்னிறை போன்று அடுக்குக் காண்க. பின்னடிகளின் கருத்து; - திருமாலிருஞ் சோலைமலையிலுள்ள ஒரு யானைக்கும் அதன் பேடைக்கும் பிரணயகலஹம் நேர்ந்து, அதனால் அப்பேடையானது அவ்யானையைச் சினந்து அதனைத் துறப்போடப்புக, யானையானது அப்பேடையை மற்ற உபயமொன்றினாலும் நிறுத்தப்படாமல், “அழகர் ஸ்ரீபாதத்தின் மேலோணை; நீ என்னைத் துறந்து அகலலாகாது” என்று ஆணையிட, அப்பேடையானது அவ்வாணையை மறுக்கமாட்டாமல் மீளா நிற்குமென்ற விசேஷத்தைக் கூறியவாறு.

English Translation

The Lord who delivered one elephant, Gajendra, and destroyed another, Kuvalayapida belonging to Kamsa, has gone to reside in Malirumsolai hill where dark bull-elephants run after their deserting cows and romp about swearing in the name of the ocean-hued one.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்