விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைத்த மா நிதியாம்*  மதுசூதனையே அலற்றி,* 
    கொத்து அலர் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    பத்து நூற்றுள் இப்பத்து*  அவன்சேர் திருக்கோளூர்க்கே,* 
    சித்தம் வைத்து உரைப்பார்*  திகழ் பொன் உலகு ஆள்வாரே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பத்து நூற்றுள் - ஆயிரத்தினுள்ளே
இப் பத்து - இத்திருவாய்மொழியை
அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து - அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து
உரைப்பார் - உரைக்க வல்லவர்கள்
திகழ் - நித்யமாக விளங்குகின்ற

விளக்க உரை

சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.

English Translation

This decad of the thousand songs by bowered Kurugur's satakopan on Madhusudana, Vaittamanidi, Lord of Tirrukkolur, will secure the rule of golden Earth for those who can master it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்