விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நினைக்கிலேன் தெய்வங்காள்*  நெடும் கண் இளமான் இனிப்போய்* 
    அனைத்து உலகும் உடைய*  அரவிந்தலோசனனைத்,* 
    தினைத்தனையும் விடாள்*  அவன் சேர் திருக்கோளூர்க்கே,* 
    மனைக்கு வான் பழியும் நினையாள்*  செல்ல வைத்தனளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெய்வங்கள் - தெய்வங்களே!
நினைக்கிலேன் - எனக்கு ஒன்றும் தோன்றவில்லை,
நெடு கண் இளமான் - பெருத்த கண்களையுடைய இளமான் போன்ற என் மகள்
இனி போய் - இப்போது சென்று
அனைத்து உலகும் உடைய - ஸர்வலோக ஸ்வாமியான

விளக்க உரை

தெய்வங்களே! என் மகளுடைய தன்மைகளை என்னால் நினைக்க முடியவில்லை; நீண்ட கண்களையுடைய இளமை பொருந்திய மான் போன்றவளான என் மகள் இப்பொழுது சென்று, எல்லா உலகங்களையுமுடைய தாமரைக்கண்ணனாகிய எம்பெருமானைத் தினையளவு சிறிய பொழுதும் விடாதவளாகி, அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கே, குடிக்கு உண்டாகும் பெரிய பழியையும் நினையாதவளாகிச் சொன்றாள் என்க.

English Translation

O Gods! I cannot understand how my tender fawn could leave and go on her own, all the way to Tirukkolur, She would never for a moment leave her Aravindalochana. Alas, she never thought of the slander she has brought on the household!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்