விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காரியம் நல்லனகள்*  அவை காணில் என் கண்ணனுக்கு என்று,* 
    ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்*  கிடக்க இனிப் போய்,* 
    சேரி பல் பழி தூஉய் இரைப்ப*  திருக்கோளூர்க்கே,* 
    நேரிழை நடந்தாள்*  எம்மை ஒன்றும் நினைந்திலளே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நேர் இழை - நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள்,
காரியம் நல்லனகள் அவை காணில் - பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால்
என் கண்ணனுக்கு என்று - “இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து
ஈரியாய் இருப்பாள் - ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள்
இது எல்லாம் கிடக்க - இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும்

விளக்க உரை

என்நேரிழை, சிறந்த பொருள்களைக் கண்டால் என் கண்ணபிரானுக்கு என்று சொல்லிக்கொண்டு அன்புள்ளவளாய் இருப்பாள்; இவை எல்லாம் கிடக்க, சேரியிலுள்ளார் எல்லாரும் பலவகைப்பட்ட பழிகளைத் தூற்றி இரைக்கும்படியாக இனிச்சென்று திருக்கோளூர்க்கே நடந்தாள்; என்னைச் சிறிதும் நினைத்தாள் இல்லை என்கிறாள்.

English Translation

All the good things she had, she would save for her Krishna, Now casting all aside, she has left home, and walked all the way to Tirukkolur, with people showering slander. Alas! She had no thought for us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்